சிறிலங்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தாமாக விரும்பி தமிழ் மக்களுக்கு எதனையும் தரப் போவதில்லை, பூகோளப் போட்டியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - கஜேந்திரகுமார் - Yarl Voice சிறிலங்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தாமாக விரும்பி தமிழ் மக்களுக்கு எதனையும் தரப் போவதில்லை, பூகோளப் போட்டியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - கஜேந்திரகுமார் - Yarl Voice

சிறிலங்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தாமாக விரும்பி தமிழ் மக்களுக்கு எதனையும் தரப் போவதில்லை, பூகோளப் போட்டியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - கஜேந்திரகுமார்


சிறிலங்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தாமாக விரும்பி தமிழ் மக்களுக்கு எதனையும் தரப் போவதில்லை, ஆகையினால் இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்ற பூகோளப் போட்டியை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

புதிய ஆட்சி வந்திருக்கின்ற நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது..

எங்களைப் பொறுத்தவரையில் புதிய அரசாங்கம் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய ஒரு அரசியல் தீர்வையோ அதே நேரம் தமிழ் மக்களுக்கு எதிரான மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளுக்கு நீதி நியாயத்தையோ கொடுக்கப் போதில்லை. ஆனால் அதே சமயம் இந்த ஐனாதிபதி இல்லாமல் வேறு ஒரு தரப்பு ஆட்சிக்கு வந்திருந்தாலும் கூட தமிழர்களைப் பொறுத்தவரையில் அதே நிலைமையாகத் தான் இருந்திருக்கும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு.

சிங்களத் தேசிய வாதத்தைக் கடைப்பிடிக்கின்ற எந்தவொரு தரப்பும் தமிழ் மக்களுடன் பேசி ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்து தாமாக விரும்பி எங்களுக்கு ஒரு அரசியல் தீர்வையோ பொறுப்புக் கூறலையோ செய்யப் போறதில்லை என்பதில் நாங்கள் மிகத் தெளிவு. எங்களைப் பொறுத்தவரையில் இன்றிருக்கக்கூடிய நிலைமையில் தமிழ் மக்களுக்கு மிகவும் அவசியமான விடயம் தமிழ் மக்களுக்கு பலமான ஒரு நேர்மையான தமிழ் மக்களுடைய நலன்களை மையப்படுத்தி செயற்படக் கூடிய ஒரு புதிய தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும். அது தான் எங்களுக்கு இருக்கக் கூடிய மிக முக்கியமான பொறுப்பு.

கடந்த பத்து வருடங்களாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட நிலையில் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டு இருக்க முடியாது. இங்கு இதை ஏன் கூறுகின்றேன் என்றால் இன்றைக்கு புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததோடு தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இலங்கைத் தீவிற்குள்ளே நாங்கள் பார்க்கின்ற பொழுது மிக மோசமான அல்லது வாய்ப்புக்கள் குறைவாக இருந்தாலும் கூட இலங்கைத் தீவிற்கு வெளியில் இருக்கக் கூடிய இலங்கைத் தீவை மையப்படுத்திய சர்வதேச அரசியலை நாங்கள் எடுத்துப் பார்த்தால் விசேசமாக இந்தியா மேற்கு நாடுகள் சீனா போன்ற வல்லரசுகளுக்கிடையே இருக்கக் கூடிய நலன்சார்ந்த புவிசார் அரசியல் போட்டித் தன்மையால் தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் நிறைய வாய்ப்புகள் வருவதற்கான சூழ்நிலைகள் இருக்கிறது.

ஏனென்றால் இந்த அரசாங்கம் மேற்கையோ இந்தியாவையோ திருப்திப்படுத்தக் கூடிய வகையில் விசேசமாக சீனாவை இலங்கைத் தீவில் இருந்த வெளியேற்றி சீனாவினுடைய செயற்பாடுகளை இலங்கைத் தீவில் மட்டுப்படுத்துவதற்கு தயாராக இருக்கப்போறதில்லை. மாறாக சீனாவிற்கு இன்னும் இன்னும் கடமைப்பட்டு இன்னும் இன்னும் சீனாவின் செல்வாக்கை இலங்கைத் திவில் வளர்ப்பதற்குத் தான் செயற்படப் போகின்றது.

அப்படிப்பட்ட ஒரு இடத்தில் இந்த அரசாங்கத்தோடு மேற்கும் இந்தியாவும் மோத வேண்டிய ஒரு இடத்திற்கு நிச்சயமாகத் தள்ளப்படும். இது வெறுமனே இலங்கைத் தீவை மட்டும் வைத்து நான் சொல்லவில்லை. இந்த வல்லரசுகளுடைய போட்டித் தன்மை எந்தெந்த நாடுகளில் இருக்கிறதோ அந்த நாடுகளில் இந்த நிலைமைகள் தான் ஏற்பட்டு இருக்கிறது.

இங்கு கேள்வி என்னவென்றால் இந்தியா மேற்கு நாடுகள் போன்ற தரப்புக்கள் இந்த அரசாங்கத்தோடு மோத வேண்டிய நிலை உருவாகுகின்ற போது நிச்சயமாக அவர்களுக்கு இந்த அரசாங்கத்திற்கு அழுத்தம் போடுகின்ற அல்லது நெருக்கடியை ஏற்படுத்துவதற்கு எடுக்கக் கூடிய ஒரே ஒரு ஆயுதம் தமிழ் மக்களுக்கு நடைபெற்ற இனப்படுகொலையும் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு என்ற விடயமும் தான்.

ஏனென்றால் சிங்கள பௌத்த தேசியவாதத்திற்கு இருக்கக் கூடிய மிகப் பெரிய் இருப்பு சவாலாக பார்க்கக் கூடியது தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வும் நடந்த இனப்படுnhகலைகளுக்கான பொறுப்புக் கூறுலும் தான். இந்த விடயங்களில் தமிழ்த் தலைமைகள் தமிழர்கள் விட்டுக் கொடுப்புக்கள் இல்லாமல் உறுதியாக இருக்க வேண்டும்.

இதை போர் முடிந்த் பத்து வருசத்திற்கு முன்னர் நாங்கள் செய்திருந்தால் இன்றைக்கு கணிசமான முன்னேற்றத்தை அடைந்திருக்கலாம். ஆனால் அடையவில்லை. தொடர்ந்தும் எங்களுடைய மக்கள் கடந்த பத்து வருசத்தில் இருந்த மாதிரியான ஒரு தலைமைத்தவத்தில் அல்லது நேற்று வரைக்கும் அந்தத் தலைமைத்துவத்தோடு இருந்து இன்றைக்கு அவர்களுக்கு செல்வாக்கு இழந்து விட்டதாக அறிகிற இடத்தில் மாற்று என்று சொல்லிப் போட்டு செயற்பட விருக்கின்ற தரப்புக்களைத் தெரிவு செய்து ஒருபோதிலும் இந்த சர்வதேச அரசியலைக் கையாள முடியாது.

தமிழ் மக்கள் இதில் முடிவெடுக்க வேண்டும். அதாவது கடந்த பத்து வருசமாக நாங்கள் ஏமாந்தது போதும். இனியும் நாங்கள் ஏமாறாமல் எங்களுடைய நட்பு சக்திகளாக இருக்கக் கூடிய இந்திய மேற்கு போன்ற தரப்புக்களுடன் ஒரு புள்ளியில் அரசியலில் சந்திக்கிறதற்கான ஒரு வேலைத் திட்டத்திற்குள் நாங்கள் இறங்க வேண்டும்.

எம்மைப் பொறுத்தவரையில் அந்த வேலைத் திட்டத்தை கடந்த பத்து வருசங்களாக எங்களுடைய மக்களுக்கு தெளிவாக விளங்கப்படுத்தி வருகின்ற ஒரேயொரு தரப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான் இருக்கின்றது. இன்றைக்கு தமிழ் மக்களுக்கு தலைமைத்துவத்தைக் கொடுக்கக் கூடிய அளவிற்கு நாங்கள் பலம் பெற்றிருக்கின்றோம்.

எங்களோடு வருகின்ற இளம் தலைமைத்துவம் என்பது மிக ஆரோக்கியமான நேர்மையான ஊழலற்ற, ஊழலை அம்பலப்படுத்தி அதற்கு எதிராக நீதி கோரக் கூடிய ஒரு தரப்பாகத் தான் இருக்கின்றது. எங்களுடைய செயற்பாடுகள் அனைத்தும் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை மையப்படுத்தி செயற்படுகின்ற ஒரு தரப்பாகத் தான் நாங்கள் காணப்பட்டும் இருக்கின்றோம். நாங்கள் அப்படித் தான் செயற்படுவதைம் விரும்புகின்றோம்.

இந்த நிலையில் எங்களுடைய மக்கள் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு வரப் போகின்ற களநிலைமைகளில் சரியான முடிவுகளை மக்கள் எடுக்க வேண்டுமென்று தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். முடிவுகளை தமிழ் மக்களின் தலைமைத்துவம் சரியாக எடுத்தால் நிச்சயமாக வரக்கூடிய சர்வதேச பூகோள அரசியல் போட்டித் தன்மையில் நாங்கள் கணிசமான முன்னேற்றத்தை அடையலாம் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post