கான கந்தர்வன் என இசைப் பிரியர்களால் போற்றப்படும் பிரபல பாடகர் ஜேசுதாஸின் 80 ஆவது பிறந்த தினம் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு ருவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில்இ இந்தியாவின் கலாச்சார வளத்திற்கு ஜேசுதாஸ் மதிப்பிடமுடியாத பங்களிப்பை நடத்தி உள்ளதாக பாராட்டி இருக்கிறார். அனைத்து வயது ரசிகர்களின் மத்தியிலும் ஜேசுதாசின் இனிமையான பாடல்கள் பிரபலமாக திகழ்வதாக குறிப்பிட்டுள்ள மோடிஇ அவர் நீண்ட நாட்கள் வாழ தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இசை துறையில் கொடிகட்டிப் பறக்கும் ஜேசுதாஸ் தமிழ்இ மலையாளம்இ ஹிந்தி மற்றும் வெளிநாட்டு மொழிகளில் 80 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment