வைரவிழாவை முன்னிட்டு நடாத்திய உதைபந்தாட்ட போட்டி - முதல்வர் ஆர்னோல்ட் பங்கேற்பு - Yarl Voice வைரவிழாவை முன்னிட்டு நடாத்திய உதைபந்தாட்ட போட்டி - முதல்வர் ஆர்னோல்ட் பங்கேற்பு - Yarl Voice

வைரவிழாவை முன்னிட்டு நடாத்திய உதைபந்தாட்ட போட்டி - முதல்வர் ஆர்னோல்ட் பங்கேற்பு

வைரவிழாவை முன்னிட்டு கோண்டாவில் மத்திய கிராம அபிவிருத்திச் சங்கம் மத்திய சனசமூக நிலையம் மத்திய விளையாட்டுக் கழகம் இணைந்து நடாத்திய மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிகள் உரும்பிராய் திருக்குமரன் விளையாட்டு மைதானத்தில் நேற்று  நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாநகர முதல்வர்  இம்மானுவல் ஆனல்ட் கலந்து சிறப்பித்ததுடன் நிகழ்வையும் ஆரம்பித்து வைத்தார்.
இறுதிப் போட்டிக்கு தெரிவான விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் போட்டிகள் நடைபெற்றன.

இந் நிகழ்வில் யாழ் உதைபந்தாட்ட லீக்கின் நிர்வாக உறுப்பினர்கள் கோண்டாவில் மத்திய கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள்  மத்திய சனசமூக நிலைய உறுப்பினர்கள் மத்திய விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் பொதுமக்கள் பார்வையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.0/Post a Comment/Comments

Previous Post Next Post