தாமரை இலை மீதான நீர்த்துளிபோல மனம் இருக்க வேண்டும் - விக்கினேஸ்வரன் - Yarl Voice தாமரை இலை மீதான நீர்த்துளிபோல மனம் இருக்க வேண்டும் - விக்கினேஸ்வரன் - Yarl Voice

தாமரை இலை மீதான நீர்த்துளிபோல மனம் இருக்க வேண்டும் - விக்கினேஸ்வரன்

தாமரை இலை மீதான நீர்த்துளிபோல மனம் இருக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சீ.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்தள்ளார்.

புதிய கட்சி உருவாக்கம், மக்கள் கணிப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்ததாவது..

அவதிப்படும் மக்கள் மீது இருக்கும் அன்பால் கரிசனையால் சிரத்தையால். மனம் தான் முக்கியம் வயது அல்ல. இவற்றை விட இறைவன் எம்மை நடத்திக் கொண்டிருக்கின்றார் என்ற நம்பிக்கையும் எமக்கு வேண்டும்.

மேலும் தாமரை இலை மீதான நீர்த்துளிபோல் மனம் இருக்க வேண்டும். இருந்தும் இல்லாத நிலை -பட்டும் படாத நிலை. அரசியலை நான் அவ்வாறு தான் பார்க்கின்றேன். ஆகவே நான் இறைவனால் கொண்டு நடத்தப்படுகின்றேன் என்பதுதான் உண்மை.

தமிழ் மக்கள் கூட்டணியான எமது கூட்சி பதிவு செய்யப்பட்டவுடன் இன்னும் கூடிய மக்கள் எம்முடன் சேர்வார்கள் என்பது எமது எதிர்பார்ப்பு. இதுவரை நாங்கள் கண்ட கேட்ட மக்கள் எமக்கு மனமார்ந்த ஆதரவை வழங்கி வருகின்றார்கள் என்பதே எமது கணிப்பு.

0/Post a Comment/Comments

Previous Post Next Post