பொது மக்களைப் பாதிக்கும் வகையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மதுபான நிலையத்தை அகற்றுங்கள் - மாகாண கூட்டுறவு திணைக்களம் - Yarl Voice பொது மக்களைப் பாதிக்கும் வகையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மதுபான நிலையத்தை அகற்றுங்கள் - மாகாண கூட்டுறவு திணைக்களம் - Yarl Voice

பொது மக்களைப் பாதிக்கும் வகையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மதுபான நிலையத்தை அகற்றுங்கள் - மாகாண கூட்டுறவு திணைக்களம்



பொது மக்கள் குடியிருப்பு பகுதியில் வைத்து மதுபானம் விற்பனை செய்வதை நிறுத்துமாறும் பொது மக்கள் குடியிருப்பு பகுதியிலுள்ள அந்த மதுபான நிலையத்தை அகற்றுமாறும் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் பொ.வாகீசன் அறிவித்துள்ளார்.

பளைதென்னை வள கூட்டுறவு அபிவிருத்தி சங்கத்தின் 31 ஆம் இலக்க சங்க கிளை (தவறணை) ஒன்று பொன்னையா வீதி கொக்குவில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கிளையானது பொது மக்கள் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ளதால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக அங்குள் பொது மக்களின் நாளாந்தச் செயற்பாடுகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், அரச உழியர்களின் செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. மேலும் அவ் வீதியால் பயணிக்க முடியாத வைகயில் நாளாந்தம் பல்வேறு வகையில் குழப்பங்கள் மோதல்கள் என்பன ஏற்படுகின்றன.

இவ்வாறு நாளாந்தம் ஏற்படுத்தப்படுகின்ற பல்வேறு பிரச்சனைகளால் அப் பகுதி மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியதுடன் அந்த மக்களின் வாழ்க்கைத் தரமும் பெருமளிவில் பாதிக்கப்பட்டிருந்தது.

ஆகையினால் மக்களின் பாதுகாப்புக் கருதி இந்த மதுபான நிலையத்தை அகற்ற வேண்டுமென அப் பகுதி மக்கள் அரசாங்க அதிபர் உள்ளிட்ட பல தரப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறிப்பாக யாழ் அரச அதிபருக்கு இக் கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை அப்பகுதி மக்கள் கையளித்திருந்தனர். அதன் பிரதிகளை நல்லூர் பிரதேச செயலார், யாழ் மதுவரித் திணைக்கள ஆணையாளர், பனைதென்னை வள கோண்டாவில் கூட்டுறவுச் சபை, Nஐ 99 கிராம சேவகர், வட மாகாண கூட்டுறவு ஆணையாளர் ஆகியொருக்கும் அனுப்பி வைத்திருந்தனர்.

இதற்கமைய அந்த மதுபான விற்பனை நிலையத்தை அகற்றுமர்று வட மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தால் கோண்டாவில் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு திணைக்களம் விடுத்துள்ள அந்த அறிவிப்பில் பொது மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளுக்கு குறித்த சங்கமானது பொருத்தமான நடவடிக்கையை எடுப்பது அவசியமானதாகவும் என்றும் இவ்வாறான பொது மக்கள் பிரச்சனைகளில் பிரதேச செயலகம் கரிசனையுடன் செயற்படுதல் செயற்படுவதும் அவசியமானதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இப் பிரச்சனைகளை அடிப்படையாக வைத்து நல்லூர் பிரதேச செயலகத்தினால் குறித்த சங்கத்திற்கு 31 ஆம் இலக்க கிளை நிலையத்திற்குரிய 2020 ஆம் ஆண்டு தைமாதம்  வரி அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பதற்கு முன்னர் பொருத்தமான வேறு ஒரு இடத்தை தெரீவு செய்து அது தொடர்பில் தமக்கு அறிக்கையிடுமர்றும் அவ்வாறு பொருத்தமான வேறு ஒரு இடத்தை தெரிவு செய்யாத பட்சத்தில் 2020 ஆம் ஆண்டிற்குரிய வரி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது என்றும் கோண்டாவில் பனை தென்னை வளக் கூட்டுறவுச் சங்கத்திற்கு  வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post