நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து வெற்றிக்கு 348 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா. ஹென்றி நிக்கோல்ஸ் ராஸ் டெய்லர் டாம் லாதம் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 49-வது ஓவரிலேயே சேஸிங் செய்து சாதனைப் படைத்தது.
'ஸ்வீப் ஷாட்ஸ்' மூலம் இந்திய சுழற்பந்து வீச்சை விளாசினார்கள். குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா 148 ரன்கள் விட்டுக்கொடுத்தனர். நியூசிலாந்தின் வெற்றிக்கு இதுதான் முக்கிய காரணமாக என்று கூறிய மார்ட்டின் கப்தில் நாளைய போட்டியிலும் இந்திய சுழற்பந்து வீச்சை விளாசுவோம் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மார்ட்டின் கப்தில் கூறுகையில் ''ஹாமில்டனில் நாங்கள் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்ட விதம் எங்களது சிறப்பானதில் ஒன்று என நினைக்கிறேன். இந்த நம்பிக்கையுடன் இந்த தொடரில் நாங்கள் முன்னோக்கி செல்ல முடியும்.
இந்திய அணியை எளிதாக வீழ்த்த முடியும் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். அவர்கள் அணியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மேட்ச் வின்னர் வீரர்களை பெற்றுள்ளனர்.
ஆகவே இந்தியாவுக்கு எதிரான தொடரை வெல்ல வேண்டும் என்றால் நாளைக்கு மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். நாளைய ஆட்டத்தில் எங்களுடைய சிறப்பான ஆட்டம் வெளிப்படும் என்று நம்புகிறேன்'' என்றார்.
Post a Comment