வடமாகாணத்தில் கொரோனா தொற்றுநோயினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் இவை தொடர்பாக சுகாதார ரீதியில் பொதுமக்கள் தமக்கு தேவையான ஆலோசனைகளையும் தகவல்களையும் பெற்றுக் கொள்ள வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் செயற்படும் வண்ணம் உதவி அழைப்பெண் சேவையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று (2020.03.30) முதல் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இச் சேவையில் 021-2217982 அல்லது 021-2226666 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பினை மேற்கொள்வதனூடாக பொதுமக்கள் இந்த சேவையினை பெற்றுக் கொள்ள முடியும் என மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

Post a Comment