இந்தியாவிலும் அதிகரிக்கும் கொரோனா தாக்கம் - 100 பேருக்கு மேல் பாதிப்பு என அரசு அறிவிப்பு - Yarl Voice இந்தியாவிலும் அதிகரிக்கும் கொரோனா தாக்கம் - 100 பேருக்கு மேல் பாதிப்பு என அரசு அறிவிப்பு - Yarl Voice

இந்தியாவிலும் அதிகரிக்கும் கொரோனா தாக்கம் - 100 பேருக்கு மேல் பாதிப்பு என அரசு அறிவிப்பு

கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே இருக்கிறது. தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐ தொட்டது.

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் 152 நாடுகளில் பரவி உள்ளது. இதுவரை 5 ஆயிரத்து 839 பேர் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் 1 லட்சத்து 56 ஆயிரத்து 745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 75 ஆயிரத்து 936 பேர் இந்த வைரசில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. நாளுக்குநாள் இதன் பாதிப்பு அதிகமாகி வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது. கேரள மாநிலத்தில் தான் முதன்முதலில் இந்த பாதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது.

மகாராஷ்டிரா கேரளா அரியானா உத்தரபிரதேசம் டெல்ல கர்நாடகா தெலுங்கானா பஞ்சாப் ராஜஸ்தான் ஆந்திரா லடாக் காஷ்மீர் தமிழ்நாடு ஆகிய 13 மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் ஒருவர் பாதிக்கப்பட்டு குணமடைந்துவிட்டார்.

கொரோனா வைரசுக்கு இதுவரை இந்தியாவில் 2 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகாவை சேர்ந்த 76 வயது முதியவரும் டெல்லியை சேர்ந்த 69 வயது பெண் ஒருவரும் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே இருக்கிறது. தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐ தொட்டது. மாநில அரசுகள் வெளியிட்டுள்ள தகவல் மூலம் இது தெரியவந்துள்ளது.

இதில் 17 பேர் வெளிநாட்டை (இத்தாலி 16 10 கனடா 1) சேர்ந்தவர்கள். அதேநேரத்தில் மத்திய சுகாதாரத்துறை பாதிப்பு 93 என்று தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரேநாளில் 12 பேருக்கு இந்த வைரஸ் அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை 19 பேர் தான் பாதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது இது 31-ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு அதிகமாக மகாராஷ்டிரா மாநிலம் தான் பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் மும்பையில் மட்டும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே மும்பை நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் இந்த பாதிப்பு அதிகரித்து வருவதால் மாநில அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பள்ளிகள்இ வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்குமாறு மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 71 வயது முதியவர் நேற்று மதியம் உயிரிழந்தார்.

சவுதி அரேபியாவுக்கு சமீபத்தில் சென்றுவந்த அவர் நீரிழிவு ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதால் தனி வார்டில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார். பரிசோதனையின் முடிவில் தான் அவர் எந்த நோயால் இறந்தார் என்பது தெரியவரும்.

மும்பையில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பியோடி விட்டனர். அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ராஜஸ்தான் தெலுங்கானா கேரளா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு புதிதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவுக்கு அடுத்த படியாக கேரளாவில் 22 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

அரியானாவில் 14 பேரும் உத்தரபிரதேசத்தில் 15 பேரும் டெல்லியில் 7 பேருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்குவங்காளம் மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை. ஆனாலும் அங்கு அனைத்து பள்ளி கல்லூரி நிறுவனங்களுக்கு மார்ச் 31-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளும் மூடப்பட்டுள்ளன.

பஞ்சாப் இமாச்சல பிரதேசம் கோவா மாநிலங்களிலும் பள்ளிகள்-கல்லூரிகள்இ சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

பக்கத்து மாநிலமான ஆந்திராவில் ஒருவரும் தெலுங்கானாவில் 2 பேரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் காரணமாக தெலுங்கானாவில் சினிமா தியேட்டர் மற்றும் மதுபான பார்கள் 'பப்பு'களை மூட முதல்-மந்திரி சந்திரசேகரராவ் உத்தரவிட்டுள்ளார். 31-ந்தேதி வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள திருமண மண்டபங்களில் மட்டுமே திருமணங்களை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதிதாக திருமண மண்டபங்களில் திருமணங்களை நடத்த முன்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தெலுங்கானா அரசு சார்பில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post