மதபோதகருடன் தொடர்புடைய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையம் அனுப்பி வைப்பு - அரச அதிபர் - Yarl Voice மதபோதகருடன் தொடர்புடைய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையம் அனுப்பி வைப்பு - அரச அதிபர் - Yarl Voice

மதபோதகருடன் தொடர்புடைய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையம் அனுப்பி வைப்பு - அரச அதிபர்

யாழ்ப்பணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான சுவிஸ் மதபோதகருடன் நேரடித் தொடர்பிலிருந்ததாக அடையாளம் காணப்பட்ட 18 பேர் பலாலியில்  அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்கு இரண்டு கட்டங்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பான மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அவர் இன்று நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்...

யாழ்ப்பாணம் அரியாலையில் ஆராதனைக் கூட்டம் நடத்துவதற்கு சுவிஸிலிருந்து வந்த மதபோதகருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருடன் ஓர் அறையில் தனித்துச் சந்தித்த தாவடி வாசிக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து மதபோதகருடன் நெருங்கிப் பழகிய 18பேர் அடையாளப்படுத்தப்பட்டனர்.

இவர்களில் 12பேர் நேற்று முன்தினம் காலையும் எஞ்சிய 6 பேர் நேற்று முன்தினம் மாலையும் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என்றார். 



0/Post a Comment/Comments

Previous Post Next Post