யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலர் பிரிவுகளிலும் அன்றாடம் கூலித்தொழில் செய்து வரும் வருமானம் குறைந்த குடும்பங்களின் விவரம் அந்தந்த கிராம சேவகர் ஊடாக திரட்டப்பட்டது.
இந்த நிலையில் தற்பொழுது கோதுமை மா மாத்திரம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக இடர் முகாமைத்துவபிரிவிற்கு கிடைத்துள்ளது.
அதனால் நாளை காலை முதல் பிரதேச செயலர்கள் ஊடாக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினரால் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment