விமான நிலையம் ஊடாக இலங்கை வந்த 233 பேர் தனிமைப்படுத்தலுக்காக யாழப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டனர் - Yarl Voice விமான நிலையம் ஊடாக இலங்கை வந்த 233 பேர் தனிமைப்படுத்தலுக்காக யாழப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டனர் - Yarl Voice

விமான நிலையம் ஊடாக இலங்கை வந்த 233 பேர் தனிமைப்படுத்தலுக்காக யாழப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டனர்

யாழ்ப்பாணம் கொடிகாமம் 522ஆவது  படை முகாமில் அமைக்கப்பட்ட கோரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்கு சுமார் 233பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை அழைத்து வரப்பட்டனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள்  கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு வருகை தந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

6 பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட அவர்கள் இன்று நண்பகல் கொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

அவர்களுக்குரிய உணவு மற்றும் மருந்து வழங்கள் உள்ளிட்டவற்றை இராணுவ சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சு மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் என்பன இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் கோரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க மாவட்டச் செயலர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு உரிய கோரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமம் 522ஆவது பிரிகெட் படை முகாமில் 500 பேரை தங்கவைக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post