யாழ்.செம்மணி பகுதியில் உள்ள தேவாலயத்தில் சமய ஆராதனை நடாத்துவதற்காக சுவிஸ் நா ட்டிலிருந்து வந்த மதபோதகா் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் குறித்த ச மய ஆராதனையில் கலந்து கொண்டிருந்த 137 போரை தனிமைப்படுத்த தீா்மானிக்கப்பட்டது.
அமைச்சா் டக்ளஸ் தேவானந்தா தலமையில் யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பா ட்டு நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பா ளா் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றிருந்த கூட்டத்திலே இத் தீா்மானம் எடுக்கப்பட்டது.
நாளை ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்படும் போதும் தங்கள் வழமையான நடவடிக் கைகளில் ஈடுபடுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. அது யாழ்.மாவட்டத்தில் சில சமயங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம். குறிப்பாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட
வா்களின் மருத்துவ அறிக்கையும் வெளியாகத நிலையில்இ அவர்கள் 137 தனிமைப்படுத்தலுக்கு உட்படவேண்டியது கட்டாயமாகும். என உயா்மட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த வா்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனா். மேலும் இராணுவத்தை பயன்படுத்தி குறித்த 137 பேரும்
வீடுகளைவிட்டு வெளியேறாத வண்ணம் தடுக்கப்படவேண்டும். என வலியுறுத்தப்பட்ட நிலை யில் இராணுவம்இ பொலிஸ்இ சுகாதார பாிசோதகா்இ கிராமசேவகா் ஆகியோரை பயன்படுத்தி அடையாளம் காணப்பட்ட 137 போரையும் தனிமைப்படுத்த தீா்மானம்
எடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த கூட்டத்தில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் வடமாகாண சமுதாய மருத்துவ நிபுணர் ஆர்.கேசவன்இ யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்இ
வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் செந்தில்நந்தன் யாழ்ப்பாணம் மாவட்ட உதவி அரச அதிபர் ம.பிரதீபன் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் தேவனேசன் யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர் .ஜெயசீலன்
கரவெட்டி பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி செந்துரன் ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பரா.நந்தகுமார் வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் போ.வாகிசன் இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மாவட்ட சமூர்த்தி உத்தியோகத்தர் யாழ்ப்பாணம் வணிகர் கழகத் தலைவர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
Post a Comment