அச்சுவேலி நெசவுசாலையில் 25 பேர் தனிமைப்படுத்தல்! அரியாலைக்கு சென்றவர்கள்- - Yarl Voice அச்சுவேலி நெசவுசாலையில் 25 பேர் தனிமைப்படுத்தல்! அரியாலைக்கு சென்றவர்கள்- - Yarl Voice

அச்சுவேலி நெசவுசாலையில் 25 பேர் தனிமைப்படுத்தல்! அரியாலைக்கு சென்றவர்கள்-

அச்சுவேலியில் உள்ள அரச நெசவுசாலையை சுமார் 20 வருடங்களாக ஆக்கிரமித்து ஊழிய சபை நடத்தி வரும் மதக்குழுவினர் 25 பேர் நெசவுசாலை வளாகத்தினுள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அரியாலையில் நடைபெற்ற ஆராதனையில் கலந்துகொண்டனர் என்பதற்காகவே இவர்கள் கடந்த 6 நாள்களாக பொலிஸ் காவலுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த மதக்குழுவினர் அரசுக்கு சொந்தமான அந்தக் கட்டிடத்தை ஆக்கிரமித்தமைக்கு எதிராக பிரதேச மக்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

மத வழிபாடு என்ற பெயரில் அங்கு இடம்பெறும்; களியாட்டங்கள் மற்றும் அதிக ஒலி எழுப்பலால் தாங்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர் என மக்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நெசவுசாலையை மீளவும் கைத்தொழில் திணைக்களம் பொறுப்பெடுத்து நடத்தவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

எனினும்இ அதிகாரிகள் இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இதற்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

இதேவேளைஇ யாழ்.மாவட்டத்தின் பல இடங்களில் வீடற்றவர்களுக் வழங்கப்பட்ட இந்திய வீடுகளை ஆக்கிரமித்து மதக்கூட்டங்கள் நடத்தப்பட்டுவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post