கொரோனோ அபாயம் நீங்கி விடவில்லை, விழிப்பாக செயற்படுவது அவசியம் - பணிப்பாளர் அறிவுறுத்து - Yarl Voice கொரோனோ அபாயம் நீங்கி விடவில்லை, விழிப்பாக செயற்படுவது அவசியம் - பணிப்பாளர் அறிவுறுத்து - Yarl Voice

கொரோனோ அபாயம் நீங்கி விடவில்லை, விழிப்பாக செயற்படுவது அவசியம் - பணிப்பாளர் அறிவுறுத்து

கொரோனோ அபாய சவாலிற்கு எதிராக ஒன்றிணைந்து ஒத்துழைத்து செயற்பட்டு அந்த வைரஸ் தொற்றை ஒழிப்போம் என யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாiலில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் நேற்று பரிசோதிக்கப்பட்ட மூவருக்கும் கொரோனா தொற்று இல்லை

குறிப்பாக மன்னாரில் இருந்து அனுமதிக்கப்பட்ட 6 மாத குழந்தைக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது.

இது அனைவருக்கும் நல்ல செய்தியாக இருப்பினும் இப்பகுதியில் கொரோனா அபாயம் நீங்கி விடவில்லை.

மேலும் எங்களுக்கு முன்னால் உள்ள சவால்களை இன்னும் தாண்டி விடவில்லை என்பதை நாங்கள் மிக முக்கியமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்று ஏற்படாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் வரை தொடர்ந்தும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவோம். 'ஒன்றிணைவோம் ஒத்துழைப்போம் ஒழிப்போம்'.


0/Post a Comment/Comments

Previous Post Next Post