இந்தியாவை வீழ்த்தி 5வது முறையாகவும் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய அவுஸ்ரேலிய மகளீர் அணி - Yarl Voice இந்தியாவை வீழ்த்தி 5வது முறையாகவும் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய அவுஸ்ரேலிய மகளீர் அணி - Yarl Voice

இந்தியாவை வீழ்த்தி 5வது முறையாகவும் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய அவுஸ்ரேலிய மகளீர் அணி

மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் 85 ஓட்டங்களினால் இந்தியாவை வீழ்த்தி அவுஸ்திரேலிய மகளிர் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றது. அவ்வணி சார்பாக மூனி 78 ஓட்டங்களையும் ஹீலி 75 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 99 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இந்திய அணி சார்பாக தீப்தி சர்மா 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் ஸ்குட் 4 விக்கெட்டுக்களையும் ஜெனசீன் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post