படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனின் நினைவஞ்சலி - Yarl Voice படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனின் நினைவஞ்சலி - Yarl Voice

படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனின் நினைவஞ்சலி

கடந்த 2016ஆம் ஆண்டு பொலிசாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனான சுலக்‌ஷனின் 28ஆவது பிறந்த தின நினைவஞ்சலி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை 08.03.2020 காலை  சுன்னாகம் நூல்நிலையத்துக்கு அருகில் சுலக்‌ஷனது நினைவாக அமைக்கப்பட்ட பஸ் தரிப்பு நிலையத்தில் இடம்பெற்றது.

குறித்த மாணவரது தந்தையாரின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் வலி.தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் தவிசாளர் க.தர்ஷன்  உறுப்பினர் அன்ரன்   வலி.கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபை உறுப்பினர் சி.அகீபன் மற்றும் சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் மாணவனது பிறந்த தின ஞாபகார்த்தமாக கேக் வெட்டி சிறார்களுக்கு வழங்கப்பட்டதுடன் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கலும் வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்வில் விருந்தினர்களுடன் மாணவனது உறவினர்கள் மாணவர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post