யாழ்.மத்திய கல்லூரி மாணவர்கள் சுமார் 50 பேர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு எச்சரிக்கையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.மத்திய கல்லூரிக்கும் யாழ்.பரியோவான் கல்லூரிக்கும் இடையில் 'வடக்கின் போர்' என அழைக்கப்படும் துடுப்பாட்ட போட்டி நடைபெறவுள்ளது.
அதனை முன்னிட்டு யாழ். மத்திய கல்லூரி மாணவர்கள் பாடசாலை சீருடையில் , பாடசாலை கொடிகளுடன் பாண்ட் வாத்தியங்கள் இசைத்தவாறு வடி ரக வாகனங்களில் வீதிகளில் ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவாறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
மாணவர்களின் கொண்டாட்டங்களால் வீதியில் பயணிப்போர் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததால் அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலை அடுத்து சம்பவ இடங்களுக்கு விரைந்த பொலிசார் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர். ,ந் நிலையில் எச்சரிக்கைசெய்து மாணவர்களை பொலிஸார் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment