சர்வதேச விசாரணை நடந்து முடிந்ததாக சுமந்திரன் கூறுவது தவறு - சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டு - Yarl Voice சர்வதேச விசாரணை நடந்து முடிந்ததாக சுமந்திரன் கூறுவது தவறு - சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டு - Yarl Voice

சர்வதேச விசாரணை நடந்து முடிந்ததாக சுமந்திரன் கூறுவது தவறு - சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டு

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச ரீதியான அறிக்கை தயாரிக்கும் பூர்வாங்க விசாரணைகளே இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ,துவரை சர்வதேச விசாரணை இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகையினால் சர்வதேச விசாரணை நடைபெற்றுள்ளதாகவோ அல்லது விசாரணை முடிவடைந்துவிட்டதாகவோ யாரேனும் கூறுவார்களாயின் அது தவறு என்றும் அவ்வாறான சர்வதேச விசாரணை ,னிமேல் தான் நடாத்தப்பட வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் ,ன்று அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் ,தனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் ,டம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடைபெற்று முடிந்து விட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் மேடைகளில் கூறி வருகின்றார்.

அவர் கூறுகின்ற கருத்து ஆனது ,லங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச ரீதியான பூர்வாங்க விசாரணைகளே ,டம்பெற்று உள்ளன. அது தொடர்பான அறிக்கை வெளி வந்திருக்கின்றது அதில் எழுத்து மூலமான வாக்குமூலங்கள் அறிக்கைகள் பெறப்பட்டு வலுவான  அறிக்கை வெளி வந்தது.

பொதுவாக பாரிய குற்றங்களுக்கு மேல் நீதிமன்றங்கள், ரயல் அட் பார் நீதிமன்ற விசாரணைகள் ஊடாகவே நீதிகளை பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறான ஓர் பொறிமுறையை நாம் கோரி வருகின்றோம்.

அந்த வகையில் ,லங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள் சர்வதேச வழக்கறிஞர்கள் சர்வதேச புலனாய்வாளர்கள் போன்றவர்களை உள்ளடக்கிய விசாரணையே நாம் கோரி நிற்கின்றோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் கூறுவது ழு.ஐ.டு.ளு விசாரணை அறிக்கையை வைத்தே குறிப்பிடுகின்றார். அது ,லங்கை விசாரணைக்கான அலுவலகம் அதில் வாக்குமூலம் அறிக்கை அனுப்புமாறு கோரப்பட்டு பல வாக்குமூலம் அனுப்பப்பட்டிருந்தது. சர்வதேச ரீதியான பூர்வாங்க விசாரணையில் அந்த அறிக்கை 2015 ஆம் ஆண்டு வெளிவந்தது.

அந்த அறிக்கை வெளி வந்து மனித உரிமைப் பேரவையில் வெளியிடப்பட்டது. அப்போது ,லங்கை அரசு நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ,ருப்பதாகவும் புதிய அரசு தங்களுக்கு கால நீடிப்பு தரவேண்டும் என்றும் கலப்புப் பொறிமுறை ஊடான விசாரணைக்கு ,னை அனுசரனை வழங்கியது.

சுமந்திரன் கூறுவது போல சர்வதேச விசாரணை முடிவடைந்து ,ருந்தால் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கால நீட்டிப்பை ஏன் கோரியது. எனவே சர்வதேச விசாரணைதான் நடத்தப்பட வேண்டும். அதனை தான் நாம் வலியுறுத்தி வருகின்றோம.

சர்வதேச விசாரணை ஊடாக சர்வதேச நீதிபதிகள் வழக்கறிஞர்கள் புலனாய்வாளர்களே உள்ளடக்கி மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகள் ஊடாக உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் அதனை நாம் ,ன்றுவரை வலியுறுத்தி வருகின்றோம்.

மேலும் ,லங்கை அரசாங்கம் nஐனிவா தீர்மானத்திலிருந்து விலகியிருக்கின்ற நிலையில் சர்வதேச சமூகம் காலம் தாழ்த்தாது பாதுகாப்புசபைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

,தே வேளை நடைபெறவிருக்கின்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் போட்டியிடுவதற்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் தயாராகி வருகின்றது. அதே நேரத்தில் ,த்தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் குடும்பிபிடி சண்டையும் குழிபறிப்புக்களுமே நடைபெற்று வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.




0/Post a Comment/Comments

Previous Post Next Post