இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவிலும் ஏனைய நாடுகளைப் போன்று கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனாவைத் தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 11 பேர் உயிரிழந்த நிலையில் 519 இந்தியர்கள் மற்றும் 43 வெளிநாட்டினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்தியா முழுவதும் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து நாட்டு மக்களிடையே நேற்று உரையாற்றிய போதே பிரதமர் நரேந்திர மோடி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டிருந்தார்.

Post a Comment