வடக்கு மாகாணத்தில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 6 மணிமுதல் 12 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் குறித்து ஐனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கொழும்பு கம்பஹா களுத்துறையில் ஊரடங்கு உத்தரவு மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வடக்கு மாகாணம் மற்றும் புத்தளத்தில் ஊரடங்கு உத்தரவு வெள்ளிக்கிழமை (27) காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு அதே நாளில் மதியம் 12 மணிக்கு அமுலாகும்.
அதே நேரத்தில் ஏனைய இடங்களில் நடைமுறையிலுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை (26) காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு அதே நாளில் மதியம் 12 மணிக்கு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment