ஆயல திருவிழா நிதியை மக்களுக்கான உதவியாக வழங்கிய சரசாலை காலி கோவில் நிர்வாகம் - முன்மாதிரியான செயற்பாட்டிற்கு பலரும் வரவேற்பு - Yarl Voice ஆயல திருவிழா நிதியை மக்களுக்கான உதவியாக வழங்கிய சரசாலை காலி கோவில் நிர்வாகம் - முன்மாதிரியான செயற்பாட்டிற்கு பலரும் வரவேற்பு - Yarl Voice

ஆயல திருவிழா நிதியை மக்களுக்கான உதவியாக வழங்கிய சரசாலை காலி கோவில் நிர்வாகம் - முன்மாதிரியான செயற்பாட்டிற்கு பலரும் வரவேற்பு

தென்மராட்சியில் உள்ள சரசாலை காளி கோவிலின் மணவாளக்கோல உற்சவ  திருவிழாவிற்கான உபய நிதியில் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வழங்கிய முன்மாதிரியான செயற்பாடு இன்று இடம்பெற்றுள்ளது.

சரசாலையில் அமைந்துள்ள காளி கோவிலின் வருடாந்த மணவாளக்கோல திருவிழா வழமைபோல இன்று சிறப்பாக இடம்பெற ஏற்பாடாகி இருந்தது.

இத்திருவிழாவிற்கென விழா உபயகாரர்கள் அன்னதான உபயகாரர்கள் மற்றும் ஆலய அடியவர்களால் சுமார் ஒரு லட்சம் ரூபா காளி கோவில் அறப்பணி சபைக்கு வழங்கப்பட்டிருந்தது.

நாட்டின் தற்போதைய நிலமையினை கருத்திற் கொண்ட ஆலய அறப்பணி சபையினர் மணவாளக்கோல திருவிழாவினை நிறுத்தி அந்நிதி மூலம் தமது சரசாலை கிராமத்தில் வாழும் சுமார் 150 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க தீர்மானித்தனர்.

இதன்படி பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடன் இன்று மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்கிவைத்தனர்.

காளி கோவில் அறப்பணி சபையின் இந்த மனிதாபிமான செயற்பாட்டை பாதுகாப்புத் தரப்பினர் பொதுமக்கள் என பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.





0/Post a Comment/Comments

Previous Post Next Post