இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்..
நாட்டில் ஏற்பட்ட கொரோனோ வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த ஐனாதிபதி செயலகம் ஊரடங்கு நடைமுறையை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்வை முற்றாக சீர்குலைத்துள்ளது.
ஆயினும் ஊரடங்கு சட்டத்தால் வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்பதனை மக்களும் ஏற்றுக் கொள்கின்றார்கள். ஆனால் சாதாரண நாட் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்கள் சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள் என்பதை ஐனாதிபதி செயலகம் சிந்திக்க வேண்டியது அவசியமானது.
குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் பல விதமான நிவாரணங்களை அறிவித்தாலும் அந்த நிவாணங்கள் மக்களிடத்தே இன்னமும் முழுமையாகச் சென்றடையவில்லை. ஆகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்படாவிட்டால் அவர்கள் எவ்வாறு வீட்டில் முடங்கி இருக்க முடியும்?
ஒரு குடும்பத்திற்கு தேவையான அரிசி மா சீனி பருப்பு தேயிலை சோயா பால்மா சவர்க்காரம் உள்ளிட்ட பொருட்கள் அவசியமாக இருக்கின்றன. இதனை அரசாங்கம் வழங்கினால் வீட்டை விட்டு மக்கள் வீதிகளில் அலைய மாட்டார்கள் பொலிசாரிடம் அடி வாங்க மாட்டார்கள் சிறைப் பிடிக்கப்பட மாட்டார்கள்.
ஆகவே ஐனாதிபதி செயலகம் உடனடியாக வடக்கு மக்களுக்கு முழுமையான நிவாரணத்தை வழங்க வேண்டும். அதுவே பாதிக்கப்பட்ட மக்களையும் காப்பாற்றுவதாக அமையும். இந்த அவசியமானதும் அவசரமானதுமான உதவியை அரசு விரைந்து எடுக்க வேண்டும்.
மேலும் மக்களின் மீது மனித நேயப் பணியில் ஈடுபடும் தன்னார்வு அமைப்பின் பிரதிநிதிகளை பிடித்து பிணையில் விடுதல் போன்ற நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொள்வதால் மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கும் கொடையாளர்கள் ஒதுங்குகின்ற துர்ப்பாக்கிய நிலைமை உள்ளது.
இந்த நிலையானது மேலும் அபாய சூழ்நிலைகளையே வடக்கில் ஏற்படுத்தும். ஆகவே வடக்கு மக்கள் கொரோனா பாதுகாப்பு என்ற அரசின் செயற்பாட்டினால்; பட்டினியால் சாவடையும் அபாய நிலை ஏற்படவுள்ளது. ஆகவே அந்தப் பாதிப்புக்கள் ஏற்படாமல் மக்களைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

Post a Comment