நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழு பிரதேசமும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. அதிலும் வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் யாழ்ப்பாணம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட முடியாத கவலைக்கு உரிய மாவட்டமாக இருக்கின்றது.
ஜனாதிபதியினால் இந்த நெருக்கடிக்குள் உள்ளாகியிருக்கும் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஓரளவு வசதி உள்ளவர்கள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடும்.எனினும் அன்றாடம் தினக் கூலி செய்து வாழும் மக்கள் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
யாழ்ப்பணத்தில் அத்தியாவசிய பொருட்கள் கூட ஐம்பது வீதத்துக்கும் அதிகரித்த விலையில் வர்த்தகர்கள் பலர் விற்பனை செய்து வருகின்றனர். இது அடித்தட்டு மக்களை இன்னும் வெகுவாக பாதிப்படைய செய்கின்றது. ஆகவே இவ்வாறான பாதிக்கப்பட்ட மக்களின் நலன்கள் உடனடியாக கவனிக்கப்பட வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையை பார்க்கும் போது சில விடயங்களை உணர்த்துகின்றன. அதாவது இன்னும் ஓரிரு மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து இறக்கு மதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் இருப்பில் இருக்கும். அவை முடிவடைந்த பின்னர் வழமையாக இறக்குமதி செய்யும் நாடுகளில் இருந்து எமக்கு கிடைக்கும் என்று உறுதியாக கூற முடியாது.
ஏனெனில் கொரோனா வைரசினால் உலக நாடுகளில் முக்கிய பல நாடுகள் பாதிப்படைந்துள்ளன. வெளிநாடுகளிலும் உற்பத்திகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளன. இவ்வாறான நாடுகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினால் கூட அவர்கள் வழமைக்கு திரும்ப குறைந்தது ஆறு மாத காலங்கள் எடுக்கலாம். அப்படியானல் அவர்கள் எமக்கான பொருட்களை ஏற்றுமதி செய்வார்கள் என கூற முடியாது.
எனவே நாம் எமக்கான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய முயற்சி எடுக்க வேண்டும். குறிப்பாக யாழ்ப்பணத்தில் ஏராளமான விவசாய காணிகள் பயன்படுத்தப்படாமல் இராணுவத்தின் பிடிக்குள் உள்ளன.அவற்றை உடனடியாக இராணுவத்தினர் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவசர தேவையாக கருதி தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவித்து விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் மாத்திரமே வடக்கில் உணவுப் பிரச்சனையை தவிர்க்க முடியும்.வலி வடக்கில் முன்னைய காலங்களில் ஏராளமான விவசாயிகள் தானிய உற்பத்திகளை மேற்கொண்டிருந்தனர். அவற்றை அவர்கள் மீண்டும் செய்ய இராணுவம் வழி விட வேண்டும். ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டுள்ள செயலணி உடனடியாக அதனை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக இந்த செயலணியில் வடக்கு மாகான ஆளுநர் அரச அதிபர் பிரதம செயலாளர் போன்றவர்கள் முக்கிய பங்கு வைக்கின்றனர். இவர்கள் செயலணியில் இந்த விடயத்தை கவனத்திகு கொண்டு சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Post a Comment