கொரோனோ வைரஸ் அச்சத்தால் யாழில் சிறைக்கைதிகள் விடுதலை - Yarl Voice கொரோனோ வைரஸ் அச்சத்தால் யாழில் சிறைக்கைதிகள் விடுதலை - Yarl Voice

கொரோனோ வைரஸ் அச்சத்தால் யாழில் சிறைக்கைதிகள் விடுதலை

யாழ். சிறைச்சாலையில் சிறு குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 கைதிகள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று செவ்வாய் கிழமை யாழ் மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்று அபாயம் காரணமாக சிறைச்சாலைகயில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்களை பிணையில் விடுதலை செய்ய ஜனாதிபதி எடுத்துள்ள சிறப்பு நடவடிக்கையின் கீழ் நீதிமன்றங்கள் ஊடாக இவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இதன்படி நேற்றும் 44 பேர் விடுவிக்கப்பட்டனர். கடந்த சில தினங்களா மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த நடவடிக்கை ஊடாக 197 மேர் ஏர்கனவே விடுவிக்கப்பட்டிருந்தனர். நேற்று விடுவிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து மொத்தமாக 241 பேர் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post