அதிகரிக்கும் கொரோனோ தாக்கத்தால் அவசரகால நடவடிக்கைகளை அறிவித்த பிரானஸ் - Yarl Voice அதிகரிக்கும் கொரோனோ தாக்கத்தால் அவசரகால நடவடிக்கைகளை அறிவித்த பிரானஸ் - Yarl Voice

அதிகரிக்கும் கொரோனோ தாக்கத்தால் அவசரகால நடவடிக்கைகளை அறிவித்த பிரானஸ்



ஐரோப்பாவில் மிகப்பெரும் பாதிப்புக்குள்ளான இத்தாலி கொரோனா வைரஸிற்கு எதிராக மேற்கொண்ட கடுமையான அவசரகால நடவடிக்கைகளை ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் பின்பற்றியுள்ளன.

அதன் பிரகாரம் ஸ்பெயினில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்குவது மற்றும் அவசர வேலைகளை தவிர பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் இதுவரை 193 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர் என்றும் 6 250 பேர் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 91 பேர் இறந்துள்ள நிலையில் கஃபேக்கள் உணவகங்கள்  திரையரங்குகள் மற்றும் பெரும்பாலான கடைகள் பிரான்ஸில் மூடப்பட்டுள்ளன.


0/Post a Comment/Comments

Previous Post Next Post