எதிர்வரும் புதன்கிழமை முதல் கொரேனோ பரிசோதனை யாழில் மேற்கொள்ளப்படும் - பணிப்பாளர் அறிவிப்பு - Yarl Voice எதிர்வரும் புதன்கிழமை முதல் கொரேனோ பரிசோதனை யாழில் மேற்கொள்ளப்படும் - பணிப்பாளர் அறிவிப்பு - Yarl Voice

எதிர்வரும் புதன்கிழமை முதல் கொரேனோ பரிசோதனை யாழில் மேற்கொள்ளப்படும் - பணிப்பாளர் அறிவிப்பு

கொரோனோ தொற்று பரிசோதனைகள் இதுவரைகாலமும் அனுராதபுரம் அனுப்பியே மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் எதிர்வரும் புதன்கிழமை முதல் யாழ்ப்பாணத்திலேயே இந்தப் பரிசொதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இப் பரிசொதனைகளை மேற்கொள்ளும் முகமாக எதிரவரும் சில தினங்களில் மருத்துவக் குழு ஒன்று கண்டிக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அதன் பின்னர் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பிடத்தில் வைத்த முதற்கட்டமாக பரிசோதனை நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் தொடர்ந்து யாழ் போதனா வைத்தியசாலையிலும் இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் கொரோனோ தொற்று தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்த மேலும் தெரிவித்ததாவது..

கொரோனொ தொற்று சந்தேகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 33 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட விசேட பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர்ளது இருப்பிடங்களுக்கு தற்பொது அனுப்பி வைத்தியிருக்கின்றோம்.

ஆயினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் மாத்திரம் கொரோனோ தொற்றுக்குள்ளாகிய நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பிற்கு அனுப்பியிருக்கின்றோம். இதே வேளையில் சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றவர்களுக்கு விசெட பரிசோதனைகளை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கமைய தீவுப் பகுதிகளில் ஒன்றான அனலைதீவில் இருந்த ஒருவர் கொண்டு வரப்படுகிறார். அவருக்கு பரிசொதனைகள் செய்த சிகிச்சையளிப்பதற்கு வைத்தியர் குலாம் தயாராக உள்ளது. அதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டள்ளதால் இன்றையதினமே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மாதிரிகள் எடுக்கப்பட்டு அதனை அனுராதபுரம் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இந்தப் பரிசோதனைகள் அடுத்த கிழமை முதல் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதனை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருக்கின்ற பீசீஆர் இயந்திரத்தை இயக்குதவற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

 இதற்கமைய எதிர்வரும் புதன்கிழமை இந்தப் பரிசோதனைகளை இங்கு செய்ய முடியும். அதனைத் தொடர்ந்து இதே பரிசோதனைகளை போதனா வைத்திய சாலையில் வைத்தும் தொடர்ந்து மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கமைய இந்தப் பரிசொதனைகளைச் செய்வதற்கான மருத்துவ குழு சில தினங்களில் கண்டிக்குச் சென்று இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்தக் குழுவினர் இங்கு வந்து பரிசொதனைகளை மேற்கொள்ள இருக்கின்றனர்.

ஆகவே இவ்வளவு நாளும் அனுராதபுரம் அனுப்பி மேற்கொள்ளப்பட்டு வந்த பரிசோதனைகள் இனிமேல் யாழில் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனடிப்படையில் எதிர்வரும் புதன்கிழமை முதல் இந்தப் பரிசோதனைகளை யாழில் மேற்கொள்ள மடியுமென நம:புவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் கொரோனோ தொற்று சந்தேகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 வயதுச் சிறுமி ஒருவர் நேற்று இரவு செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகளின் பிடி நோய்த் தொற்று இல்லை என உறுதிப்படுத்தி அவரை தற்போது அவரது விட்டிற்கு அனுப்பி வைத்திருக்;கின்றோம்.

ஆனாலும் இந்தத் தொற்றுக்கான அபாயம் இந்தப் பகுதியில் நீங்கிவிடவில்லை. ஆகவே பொது மக்கள் அரசாங்கத்தினதும் சுகாதார அமைச்சினதும் அரச அதிகாரிகளினதும் ஆலோசனைப்படி மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

ஏனெனில் இந்த நோயானது உலக நாடுகளில் மிக வேகமாகவும்
விரைவாகவும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவி வருகின்றது. பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றது. இன்றை வரைக்கும் இலங்கை ஒரு அதிஸ்ரமான நாடாக இருக்கின்றது.

ஆனாலும் நோய்த் தாக்கத்தின் அபாயம் நீங்கவில்லை.
ஆகவே இந்த நோய் தொற்றிக் கொண்டால் பல உயிரிழப்புக்களை ஏற்படுத்தக் கூடிய ஆபத்து ஏற்படலாம். இவ்வாறு இந்த நோய் தொற்றிக் கொண்டால் ஏற்படும் அபயாத்தை தெரிந்து கொண்டு பொது மக்கள் மிக மிக அவதானமாக நடந்து கொள்ள வேண்டியது மிக மிக முக்கியமானக இருக்கின்றது என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post