ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் யாழில் பலரும் கைது - வாகனங்களும் தடுத்து வைப்பு - Yarl Voice ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் யாழில் பலரும் கைது - வாகனங்களும் தடுத்து வைப்பு - Yarl Voice

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் யாழில் பலரும் கைது - வாகனங்களும் தடுத்து வைப்பு


ஊரடங்கு சட்டத்தை மீறி சாவகச்சேரி நகரப்பகுதிகளில் நடமாடிய சுமார் 20 பேரை சாவகச்சேரி பொலிஸார் இன்று மாலை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் நாளைய தினம் திருமண பந்தத்தில் இணைந்துகொள்ளவிருந்த மணமகன் ஒருவரும் உள்ளடங்கியுள்ளார்.

மேலும் இன்றைய தினம் இடம்பெற்ற திருமணமொன்றுக்கு சென்று  வந்துகொண்டிருந்த மணமக்களின் உறவினர்களும் அவர்கள் பயணித்த வாகனத்தோடு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 கைது செய்யப்பட்ட அனைவரும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் மணமகன் தனது திருமண அழைப்பிதழை காண்பித்ததன் அடிப்படையில் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பின்னர் கைது செய்யப்பட்ட  ஏனையவர்களும் வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் மதியத்தில் இருந்து  ஊரடங்கு நடைமுறை மிகவும் இறுக்கமாக கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறி குற்றச்சாட்டில் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஊரடங்கு நேரத்தில் காரணங்கள் எவையுமின்றி வீதிகளில் நடமாடிய போது 30 பேரும் கைது செய்யப்பட்டனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த வாகனங்களும் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post