கொரோனோ ஆபத்து நீங்கி விடவில்லை - வரவில்லை என பெருமை கொள்ள முடியாது - பணிப்பாளர் - Yarl Voice கொரோனோ ஆபத்து நீங்கி விடவில்லை - வரவில்லை என பெருமை கொள்ள முடியாது - பணிப்பாளர் - Yarl Voice

கொரோனோ ஆபத்து நீங்கி விடவில்லை - வரவில்லை என பெருமை கொள்ள முடியாது - பணிப்பாளர்

கொரோனோ தொற்று வரவில்லை என எவரும் பெருமை கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள யாழ் போதனா வைத்தியசாலையப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இந்த தொற்று நோயின் ஆபத்தக் குறித்துச் எச்சரிக்கை செய்துள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

இந்தப் பகுதியில் தொற்றின் அளவு குறைவாக காணப்படலாம். ஆனால் தொற்றின் அபாயம் காணப்படலாம். அதே நேரத்தில் உலகளாவிய ரீதியில் இதே போல இன்னுமொரு தொற்றும் வரக் கூடும். அப்படியாக அந்தத் தொற்றும் சில சமயங்களில் வரலாம். ஆகவே பொது மக்கள் தற்காப்பு ஆலோசனைகளை மிகவும் கடுமையாகப் பின்பற்ற வேண்டும்.

குறிப்பாக கைகளை வடிவாக சவர்க்காரம் இட்டு கழுவுதல் ஒருவருக்கும் இன்னொருவருக்கும் சுமார் மீற்றர் இடைவெளி தூரமாவது பேனுதல். தும்மல் அல்லது இருமல் ஏற்படுகின்ற போது அவற்றை மற்றவருக்கு தெளிக்காமல் ரிசுவினால் அதை சிதறாமல் பார்த்தக் கொண்ட பின்னர் கைகளை நன்றாக கழுவ வேண்டும். சில சமயங்களில் முழங்கையை மடித்து தும்மல் இருமல் செய்ய வேண்டும். முகங்களில் கைகளை வைக்க கூடாது.

அடிக்கடி முகங்களில் கை வைப்பதனால் பல்வேறு இடங்களிலும் இருக்கின்ற கிருமி மூக்கு வாய்களில் போவதற்கான அபாயம் காணப்படுவதால் ஒவ்வொருவரும் முகத்திலே கைவைப்பதை குறைத்துக்  கொள்ள வேண்டும்.

குறிப்பாக இளைஞர்கள் இதனைப் பின்பற்ற வேண்டும். ஏனெனில் இளைஞர்கள் இந்த நோயைக் காவுவார்கள். அவ்வாறு காவி வீட்டிலே அல்லது சூழலிலே இருக்கின்ற வயோதிபர் அல்லது ஏனைய வருத்தத்திற்கு உள்ளானவர்கள் ஒருவருக்கு வழங்குகின்ற போது அவர்களிடம் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதனால் விரைவாக அவர்களுக்கு இந்த வியாதி உடனடியாகவே வெள்ளிபடுத்தப்படும்.

ஆகவே வயோதிபர்களைப் பாதுகாப்பது மிக முக்கியமானது. அதற்கு சுகாதார நடைமுறைகளை ஒவ்வொருவரும் பேண வேண்டியது மிக மிக அவசியமாக இருக்கின்றது.

இந்தச் சூழலில் ஒருவர் தனக்கு வருத்தம் வரவில்லை என பெருமை கொள்ள முடியாது. ஒருவர் இந்த நோயைக் காவுவதன் மூலம் பலரது உயிரிழப்புக்கும் காணரணமாக அமைய முடியும்.

ஆகவே எமது பிராந்தியத்தைப் பொறுத்தவரையில் இப்போது கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற இந்த வியாதியை தொடர்ந்தும் பரவாமல் அவதானமாக இருக்க வேண்டும். இந்த நடைமுறையை  பின்பற்றுவதன் மூலம் நாங்கள் இந்த நோய்ப் பரவாமல் தடுக்கலாம் என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post