இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது..
சிறிலங்கா இராணுத்தில் கடமையாற்றிய சுனில் ரத்நாயக்க என்னும் இராணுவ உறுப்பினர் யாழ்ப்பாணம் மிருசுவிலில் 2000ம் ஆண்டு காலப்பகுதியில் 3 சிறுவர்கள் உட்பட 8 தமிழ் பொது மக்களை கொடூரமான முறையில் படுகொலை செய்தார் என்னும் குற்றத்திற்காக மேற்படி குற்றவாளிக்கு 2015 ம் ஆண்டு கொழும்பு உச்ச நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
2002 ம் ஆண்டு அப்பொழுது இருந்த சட்டமா அதிபரினால் சுனில் ரத்நாயக்க என்ற இந்த இராணுவ உறுப்பினருக்கு எதிராக 19 பாரிய குற்றங்களின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொலைக் குற்றம் நிறுபிக்கப்பட்டு உச்ச நீதி மன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியான சுனில் ரத்நாயக்க என்பவருக்கு சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்கள் தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்தமையானது நாட்டின் நீதித் துறையை கேள்விக்குறிக்குள்ளாக்கி உள்ளதுடன் கடந்த காலங்களைப் போல் மீண்டும் தனது சர்வதிகாரப் போக்கையும்இ இராணுவ ஆட்சியையும் நாட்டிற்குள் நடத்துவதற்கு முற்படும் முகமாக இந்த இராணுவ உறுப்பினரின் விடுதலை அமைந்துள்ளதா என பலத்த சந்தேகங்களை ஏற்படித்தியுள்ளது.
ஏற்கனவே 2009 ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தால் திட்டமிட்டு அரங்கெற்றப்பட்ட இனப்படுகொலைகளுக்கான சர்வதேச விசாரணைகள் இன்னமும் முற்றுப்பெறாத நிலையிலும்இ ஜ.நா சபையில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச உள்ளிட்ட முன்னாள் இராணுவ உயர் அதிகாரிகள் மீதும் தொடுக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு இன்னமும் உரிய முறையில் பொறுப்புக்கூறாமல் காலத்தை இழுத்தடிக்கும் நிலையில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்கள் குற்றவாளியான சுனில் ரத்னாயக்க என்ற இராணுவ உறுப்பினரை விடுதலை செய்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
மேலும் சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்களின் இவ் தன்னிச்சையான முடிவுகள் நாட்டின் நீதித் துறையை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளதோடு இன்னமும் பல ஆண்டுகள் கடந்தும் சிறிலங்கா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியாமல் இருக்கும் நிலையில்
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக (கொரோனா) பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையில் தமிழ் மக்களும் அரசியல் வாதிகளும் தனக்கெதிராக வீதிகளில் இறங்கி போறாட மாட்டார்கள் என்ற குறுட்டுத்தனமான சிந்தனையின் நிமிர்த்தம் கொலைக் குற்றவாளியான சுனில் ரத்னாயக்காவை விடுதலை செய்தமைக்காக சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்களை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன்.
Post a Comment