ஊரடங்கு சட்டத்தால் வாழ்வாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் - டக்ளஸ் உத்தரவு - Yarl Voice ஊரடங்கு சட்டத்தால் வாழ்வாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் - டக்ளஸ் உத்தரவு - Yarl Voice

ஊரடங்கு சட்டத்தால் வாழ்வாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் - டக்ளஸ் உத்தரவு

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள 88 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளதுடன் நடவடிக் கைகளை துாிதப்படுத்துமாறு அதிகாாிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா். 

கொரோனா நிலமை தொடா்பாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருடைய அலுவலகத்தில் இன்று காலை இடம் பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்படி தீா்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. மேற்படி கூட்டத்தினை தலமை தாங்கிய அமைச்சா் டக்ளஸ் தேவானந்தா கருத்து தொிவிக்கையில்.. 

வெள்ளம் வறட்சி போன்ற இயற்கை அனா்த்தங்கள் உண்டாகும் போது வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நி வாரணம் வழங்கப்படும்.

 அதேபோல் இன்று ஊரடங்கு வேளைகளில் மக்கள் கடுமையான பாதிப்பை எதிா்கொண்டிருக்கின்றனா். குறிப்பாக வாழ்வாதார ரீதியாக மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனா். 

எனவே அவா்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். என கூறியதுடன் அனா்த்த முகாமைத்துவ பிாிவு ஊடாக அதனை செய்யலாமா? என கேள்வி எழுப்பினாா். இதன்போது கருத்து தொிவித்த அனா்த்த முகாமைத்துவ பிாிவினா் தேசிய அளவில் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படால் மட்டுமே அதனை செய்யலாம்  என பதிலளித்தாா். 

இதற்கு பதிலளித்த அமைச்சா் அரசாங்கத்துடன் பேசுவதுடன் அமைச்சரவையிலும் தாம் அனுமதி பெறுவதாக கூறியதுடன் நிவாரணம் வழங்கவேண்டியவா்கள் தொடா்பான தரவுகளை பெறுமாறு கூறியிருந்தாா். 

இதற்கு பதிலளித்த அதிகாாிகள் சமுா்தி நிவாரணம் பெறும் மற்றும் சமுா்தி நிவாரணம் வழங்கப்படவேண்டியவா்கள் அடங்கலாக 88 ஆயிரம் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். என கூறப்பட்டது. இந்நிலையில் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சா் பணித்துள்ளாா். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post