பிழையான தகவல்களை வெளியிட்டு பொது மக்களை அச்சமடைய செய்ய வேண்டாம் என்றும் அவர் அரசியல் வாதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்.போதனா வைத்திய சாலையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு ஈடு கொடுக்கும் நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் வளங்கள் இல்லை என்று கூறியுள்ளமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
வைத்திய சாலைகளை பற்றி சரியான தகவல்களை சிலர் பேசுவதில்லை. வைத்தியசாலைகள் அங்குள்ள வசதிகள் மற்றும் நோய்கள் தொடர்பான தகவல்களை தகுதிவாய்ந்தவர்கள் ஊடாகவே பொது மக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
தற்போது 20 படுக்கைகளை கொண்ட தனியான கொரோனா சிகிச்சை விடுதி உள்ளது. மேலதிக தேவை ஏற்படுமாக இருந்தால் மற்றுமொரு விடுதியையும் கோரோனா சிகிச்சை விடுதியாக மாற்றுவதற்கு தயாரா வைத்துள்ளோம்.
அசாதாரண நிலை அல்லது சடுதியான நோய் அதிகரிப்பு யாழ்ப்பாணத்தில் ஏற்படுமாக இருந்தால் எமது சேவைகளை விஸ்தரிப்பதற்கு தயாரான நிலையிலேயே உள்ளோம். எனவே மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
மேலும் யாழ்.போதனா வைத்திய சாலையின் வைத்திய நிபுணர்கள் கொண்ட குழு இரண்டு நாளுக்கு ஒருமுறை கூடி யாழின் நிலவரங்கள் தொடர்பில் ஆராய்வுகளை மேற்கொள்ளுகின்றோம்.
மேலதிக வசதிகளை அதிகரிப்பது தொடர்பில் உரிய கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவசர தேவைகளை பூர்த்தி செய்ய கூடிய நிலையிலேயே யாழ்.போதனா வைத்திய சாலை உள்ளது என்றார்.
Post a Comment