தமிழக பா.ஜ.க. தலைவராக முருகன் நியமனம் - Yarl Voice தமிழக பா.ஜ.க. தலைவராக முருகன் நியமனம் - Yarl Voice

தமிழக பா.ஜ.க. தலைவராக முருகன் நியமனம்

தமிழக பா.ஜ.க. தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளாரென அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா அறிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் அந்த பதவி காலியாக இருந்தது. அதனைத் தொடர்ந்து அந்த பதவிக்கு சிலரின் பெயர்கள் கூறப்பட்டன

இந்நிலையில்இ தமிழக பா.ஜ.க. தலைவராக எல்.முருகனை நியமித்து அக்கட்சி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார். முருகன் தற்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக உள்ளார்.

வக்கீலான முருகன் கூறுகையில் 'என் மீது நம்பிக்கை வைத்து பதவி கொடுத்துள்ளனர். அதற்கேற்றவாறு செயற்படுவேன். தலைவராக நியமிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜே.பி.நட்டா ஆகியோருக்கு நன்றி' என தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post