ஊரடங்குச் சட்ட நடைமுறையால் வீடுகளுக்குள் முடங்கிய மக்கள் - வெறிச்சோடிய யாழ் நகரம் - Yarl Voice ஊரடங்குச் சட்ட நடைமுறையால் வீடுகளுக்குள் முடங்கிய மக்கள் - வெறிச்சோடிய யாழ் நகரம் - Yarl Voice

ஊரடங்குச் சட்ட நடைமுறையால் வீடுகளுக்குள் முடங்கிய மக்கள் - வெறிச்சோடிய யாழ் நகரம்

இலங்கை முழுவதும் இன்று வெள்ளிக்கிழமை அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தையடுத்து யாழ் நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

கொரோனோ வைரஸ் தொற்றைத் தடுக்கும் நோக்கில் இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்குச் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அத்தியாவசிய தேவைகள் மற்றும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட போதும் சில வர்த்தக நிலைங்கள் இயங்கிய நிலையில் அவற்றை பொலிஸார் பூட்டுமாறு அறிவுறுத்தியதற்கமை அனைத்து வர்த்தக நிலைங்களும் பூட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து யாழ் நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. பொது மக்களும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post