ஐனாதிபதியிடம் கூட்டமைப்பின் சுரேந்திரன் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்.. - Yarl Voice ஐனாதிபதியிடம் கூட்டமைப்பின் சுரேந்திரன் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்.. - Yarl Voice

ஐனாதிபதியிடம் கூட்டமைப்பின் சுரேந்திரன் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்..

கொரோனோ கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட வருமானம் குறைந்த மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான குருசாமி சுரேந்திரன் ஐனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் நகரிலுள்ள தமது கட்சியின் அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது..

கொரோனா தாக்கத்தால் பல்வேறு பாதிப்புக்களை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நோயில் இருந்து மக்களைப் காப்பாற்றுவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளாலும் வாழ்வாதார ரீதியாக பல பாதிப்புக்கள் மக்களுக்கு ஏற்படுகிறது. ஆகவே நோய்த் தாக்கத்தை அரசாங்கம் கட்டுப்படுத்துகின்ற அதே வேளையில் அவ்வாறு கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்.

ஏனெனில் அன்றாட தொழில் செய்து வருபவர்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்பட்டு வருகின்றது. ஆகவே அவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டியது அவசியமானது. ஆகையினால் இந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். இது தொடர்பாக ஐனாதிபதியிடமும் கோரிக்கை விடுத்திருக்கிறோம்.

கொரோனோ கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட வருமானம் குறைந்தவர்களுக்கான நிவாரணக் வழங்கப்பட வேண்டுமென்ற கோரி; ஐனாதிபதிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது..

கொரோனோ நோயைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. வீட்டிலிருந்து வெளியே செல்லாமல் வீட்டிலேயே வேலை வர்ய்புகளைச் செய்து கொள:ளுதல் கடைகளை மூடுதல், நிறுவனங்களை மூடுதல், தொழிற்சாலைகளை மூடுதல், ஊடுரங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்துதல் என்று மக்கள் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் வரவேற்கிறோம்.

அதே வேளையில் அன்றாட வருமானத்தைப் பெற்றுக் கொண்டிருக்கக் கூடிய தொழிலாளர்கள் மீனவர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் சுகாதாரத் தொழிலாளர்கள் போன்ற இன்னோரன்ன பலர் தம்முடைய அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத பொருளாதார இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். இவர்களுடைய தேவைகளை உடனடியாகப் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐனாதிபதி அவர்களை வேண்டிக் கொள்கிறோம்.

இவர்களுடைய நிலை பொருளாதார ரீதியாக கவலைக்கிடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் பாரதூரமான நிலைமைக்கு இட்டுச் செல்வதற்கு முன்னதாக அவசர கால நிலையின் கீழே அல்லது இயற்கை அனர்த்தம் அல்லது வரட்சி நிவாரணத்தின் கீழேயோ உடனடியாக இவர்களுக்கான தீர்வினைப் பெற்றுத் தருமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.

எமது பிரதேசத்தில் 70 வீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் அன்றாடத் தொழில் செய்பவர்கள் என்பதை கருத்திற் கொண்டு அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாக்கும் முகமாக உடனடி வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்றுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post