ஐ.தே.க. கூட்டணிக்குள் பிளவு - யானையில் தனித்து போட்டி - Yarl Voice ஐ.தே.க. கூட்டணிக்குள் பிளவு - யானையில் தனித்து போட்டி - Yarl Voice

ஐ.தே.க. கூட்டணிக்குள் பிளவு - யானையில் தனித்து போட்டி

எதிர்வரும்  நாடாளுமன்றத் தேர்தலில் யானைச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஆணையகத்திற்கு அறிவித்துள்ளது.

அந்தவகையில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் கரியவாசம் தேர்தல் ஆணையகத்திற்குத் தெரிவித்துள்ளார். இது குறித்த கடிதம் இன்று (சனிக்கிழமை) தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணியில் களமிறங்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டது.

இருப்பினும் குறித்த கூட்டணியின் சின்னம் தொடர்பாக சஜித் தரப்பு மற்று்ம ரணில் தரப்புக்கு இடையில் தொடர்ந்தும் முரண்பாடு நிலவிவருகின்றது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் சஜித் தரப்பினர் பங்கேற்கவில்லை.

இதனால்இ தொடர்ந்தும் சஜித் தலைமையிலான கூட்டணியின் சின்னம் இறுதிசெய்யப்படாத நிலையில் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி தனித்துப் போட்டியிட முடிவுசெய்துள்ளது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post