கச்சத்தீவு திருவிழாவிற்கு சென்று திரும்பியவர்களிடம் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை - Yarl Voice கச்சத்தீவு திருவிழாவிற்கு சென்று திரும்பியவர்களிடம் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை - Yarl Voice

கச்சத்தீவு திருவிழாவிற்கு சென்று திரும்பியவர்களிடம் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை

கச்சத்தீவு திருவிழாவிற்கு சென்று திரும்பிய 33 தமிழக பயணிகளிடம் கொரோனா வைரஸ் தொற்று குறித்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் துறைமுகத்தில் வைத்து மருத்துவ குழுவினால் இவ்வாறு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ஆரம்பமானது. இந்த நிலையில் இன்று காலை திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து சுமார் ஏழாயிரம் பக்தர்களும் தமிழகத்தில் இருந்து சுமார் மூவாயிரம் பக்தர்களும் பங்கேற்றுள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தேவையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்குமாறு கச்சத்தீவு உற்சவத்தில் பங்கேற்றிருந்த பக்தர்கள்இ பொலிஸார் மற்றும் கடற்படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post