தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாமனிதர் சிவநேசன் நினைவேந்தல் நெல்லியடியில்.. - Yarl Voice தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாமனிதர் சிவநேசன் நினைவேந்தல் நெல்லியடியில்.. - Yarl Voice

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாமனிதர் சிவநேசன் நினைவேந்தல் நெல்லியடியில்..

மாமனிதர் கிட்டிணன் சிவநேசன் அவர்களது 12 ம் ஆண்டு நினைவேந்தல் நெல்லியடியில் இடம் பெற்றது

மாமனிதர் கிட்டிணன் சிவநேசன் அவர்களது 12 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சி நெல்லியடி மாலிசந்தி பிள்ளையார் ஆலய திருமண மண்டபத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் தம்பன் துசாந்தன் தலமையில்  இடம் பெற்றது.


இந் நிகழ்வில் பொது ஈகைச்சுடரினை மாமனிதர் கிட்டிணன் சிவநேசன் அவர்களது ஏற்றி வைத்தார் தொடர்ந்து உருவ படத்திற்க்கான மலர் மாலையினை துணைவியார்  திருமதி சோதி மலர் அணிவித்தார்.

தொடர்e;J மலர் மாலைகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொது செயலாளர் செல்வராசா கஜேந்திரன்  அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர்  ஆனந்தராசா   தமிழ் தேசிய மக்கள் முன்னணி சட்ட ஆலோசகர்களான  க.சுகாஸ் சி.காண்டீபன் ஆகியோர் ஆரம்பித்து அணிவித்தனர்.

 சிவனேசன் அவர்களது உறவுகள் நண்பர்கள் ஆதரவாளர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் செயற்பட்டாளர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கல்நது கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
0/Post a Comment/Comments

Previous Post Next Post