கச்சதீவு திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கானோர் பயணம் - Yarl Voice கச்சதீவு திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கானோர் பயணம் - Yarl Voice

கச்சதீவு திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கானோர் பயணம்

கச்சதீவு அந்தோனியார்  ஆலய வருடாந்த திருவிழாவெக்கு யாழ்ப்பாணம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் இருந்து 2 ஆயிரத்து 500 பக்தர்கள்  குறிகாட்டுவான் இறங்குதுறை ஊடாக தமது பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழா நேற்றுமாலை ஆரம்பமானது. இன்று இரவு சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று நாளைக் காலை திருப்பலி ஒப்புக்கொடுப்புடன் திருவிழா நிறைவடையும்.

கச்சதீவு அந்தோனியாரை வழிபாடு செய்ய  ஆயிரக் கணக்கான பக்தர்கள் குறிகாட்டுவான் இறங்குதுறையூடாக படகுகளில் பயணமாகியுள்ளனர். அவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் இ.போ.ச. யாழ்ப்பாணம் சாலை கடற்படை உள்பட்ட துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிகாட்டுவான் இறங்குதுறை பகுதியில்  கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 18 பேரிடம் மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அனைத்து பயணிகளிடமும் படையினர் சோதனை மேற்கொண்ட பின்னரே படகில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதன்பொதே 18 மதுபானப் போத்தல்கள்  கைப்பற்றப்பட்டுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post