முகக் கவச பாவனை தொடர்பில் வட மாகாண சமுதாய மருத்துவர் விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice முகக் கவச பாவனை தொடர்பில் வட மாகாண சமுதாய மருத்துவர் விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice

முகக் கவச பாவனை தொடர்பில் வட மாகாண சமுதாய மருத்துவர் விடுத்துள்ள அறிவித்தல்


வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள சமுதாய மருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி இ. கேசவன் முகக் கவச பாவனை தொடர்பில் பொது மக்களுக்கு அறிவுறுது;தல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது..

தற்பொழுது கொரோனா நோய் பரவிவருவதால் பொதுமக்கள் முகக் கவசத்தை வாங்குவதற்கு தேடித் திரிவதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளி அல்லது அவ்வாறு சந்தேகிக்கப்படுபவருடன் நேரடியாக 3 அடிக்குட்பட்ட தூரத்தில் ஏதாவது நடவடிக்கை மேற்கொள்ளுபவர்கள் முகக்கவசம் அணிவது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளி இருமும்போது, தும்மும்போது இந் நோய்க்கிருமிகள் வெளியேறுவதால் கொரோனா நோயாளி முகக்கவசம் அணிவது கட்டாயம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக கொரோனா நோயாளியை அல்லது அவ்வாறு சந்தேகிக்கப்படுபவரை பராமரிக்கும் வைத்தியர், தாதிமார் மற்றும் சுகாதார சேவை சம்பந்தப்பட்டவர்கள் முகக்கவசம் அணிதல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நோயாளியின் உமிழ்நீர் துகள்கள் மூலமாக கொரோனா பரவும். உமிழ்நீர் துகள்கள் பெரும்பாலும் நீண்டதூரம் பயணிக்காது. எனவே நோயாளியிடமிருந்து 4 அடிக்கு அப்பால் இருப்பவர்கள் முகக்கவசம் அணியவேண்டிய அவசியம் கிடையாது.

முகக்கவசம் அணிவோரும், அணியத் தேவை இல்லாதோரும் கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டு கழுவுதல் அத்தியாவசியமாகும்.





0/Post a Comment/Comments

Previous Post Next Post