கொரோனோ வைரஸ் குறித்து எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் - விராட் கோலி - Yarl Voice கொரோனோ வைரஸ் குறித்து எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் - விராட் கோலி - Yarl Voice

கொரோனோ வைரஸ் குறித்து எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் - விராட் கோலி

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவித்த அறிவுரையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா வைரசான 'கோவிட்-19' தொற்று நோய் இந்தியாவில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200-ஐ நெருங்கிவிட்டது.

இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

மக்கள் தங்களை தனிமைப்படுத்துவதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதனால் வருகிற 22 ஆம் திகதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த ஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் அறிவுரையை பொறுப்புள்ள குடிமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று விராட் கோலி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் 'கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாம் அனைவரும் போராட வேண்டும். அதற்காக மிகவும் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும்.

நாம் அனைவரும் பொறுப்புள்ள குடிமக்களாக இருக்க வேண்டும். பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி தெரிவித்த அறிவுரையை அனைவரும் பின்பற்ற வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post