கொழும்பு கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 6 மணி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
24ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படும்.
அத்துடன் ஏனைய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 23 திகதி காலை 6 மணிக்கு நீக்கப்படும்.
மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுக்கப்படவுள்ளது.
அப்பகுதிகளில் இந்த ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளைஇ ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் நாட்டில் உள்ள மதுபான சாலைகளை திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Post a Comment