கொரோனோ நோயாளியின் தாவடி வீட்டிற்கு அதிரடியாக களமிறங்கிய சுகாதார பிரிவு - Yarl Voice கொரோனோ நோயாளியின் தாவடி வீட்டிற்கு அதிரடியாக களமிறங்கிய சுகாதார பிரிவு - Yarl Voice

கொரோனோ நோயாளியின் தாவடி வீட்டிற்கு அதிரடியாக களமிறங்கிய சுகாதார பிரிவு


யாழ்.செம்மணி தேவாலயத்திற்கு வருகைதந்த சுவிஸ் நாட்டு போதகர் ஒருவருடன் பழகிய நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான யாழ்.தாவடி பகுதியை சோ்ந்த நபருடை வீடு மற்றும் அவா் சென்றுவந்த இடங்களில் தொற்று நீக்கல் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது.

கிருமி தொற்றை தடுக்கும் கவச ஆடைகளுடன் பொலிஸாா் இராணுவம் ஆகியவற்றின் பாதுகாப்புடன் குறித்த நபருடைய வீடு அருகில் உள்ள கோவில்கள் மற்றும் வா்த்தக நிலையங்கள் அயலில் உள்ள வீடுகள் போன்றவற்றில் இந்த தொற்று நீக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நல்லூர் பிரதேச சபை முன்னெடுத்துள்ள இந் நடவடிக்கை போன்று ஏனைய உள்ளுராட்சி மன்றங்களும் தொற்று நீக்கல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post