ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பெருமளிவலான மக்கள் வர்த்தக நிலையங்களை நோக்;கி படையெடுத்தனர். அதே போன்று அந்தப் பொருட்களை வாங்குவதற்காக வங்கிகளுக்கும் படையெடுத்திருந்தனர். ஆனால் வங்கிகள் நேரத்திற்கே பூட்டியதால் வங்கிகள் தொடர்பில் விசனம் வெளியிட்டிருந்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கையில்..
பணம் உள்ள வசதி படைத்தவர்கள் ஏரிஎம் ஊடாக என்றாலும் வங்கிளில் பணத்தை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் வசதியில்லாதவர்கள் வங்கிளில் நகைகளை அடைகு வைத்து தான் தான் பணத்தை பெற வேண்டிய நிலைமை உள்ளது. அதே போல வங்கிகளில் வைப்புச் செய்த நாங்கள் ஏரிஎம் அட்டை இல்லாவிட்டால் வங்கிகளில் தான் பணத்தை பெற முடியும்.
ஆனால் இங்கு வங்கிகள் பூட்டி இனி பணம் பெற முடியாது என்று கூறுகின்றனர். அப்படியானால் இதனை நம்பி வந்த எங்களது நிலைமை என்னவாகும் என்று யாரும் சிந்திப்பதாக இல்லை.
ஊரடங்கால் தற்போது எங்கள் பிள்ளைகள் எங்கள் குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன. நாங்கள் எங்களிடம் இருந்த நகைகளை அடகு வைத்து தான் பணத்தைப் பெற்றுக் கொள்ள வங்கிகளுக்கு வந்தோம். அவ்வாறு அடகு வைத்த பணத்தில் தான் குடும்பங்களுக்கு பொருட்களை வாங்க வேண்டிய நிலைமையில் நாங்கள் இருக்கிறோம்.
ஆனால் வங்கிகளின் செயற்பாடுகளால் நாம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலையில் வீதியில் நிற்கின்றோம். ஏனெனில் கொரோனோ தாக்கத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் ரடங்கு உத்தரவை மூன்று நாட்கள் போட்டிருந்தது.
இன்று தான் குறிப்பிட்டளவு நேரம் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தியிருக்கின்றது. இந்தக் கொஞ்ச நேரத்திற்குள் நாம் எமது வேலைகளை முடிக்க வெண்டும். எமக்கு தேவையானதை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்காகவே நாம் நீண்ட தூரம் கடந்து வந்திருக்கிறோம்.
ஆவ்வாறு இங்கு வந்தால் வங்கிகளில் அடகு வைக்க முடியாது என்று கூறுகின்றனர். ஏன் என்று கேட்டால் தாம் 10 மணியுடன் வங்கிகளை மூடியுள்ளதாக காரணம் கூறுகின்றனர்.
ஆனால் அரசாங்கம் காலை 6 மணிக்கு ஊரடங்களை தளர்த்தி மதியம் 12 மணிக்கு அமுல்ப்படுத்தப்படுமென்று தெரிவித்திருந்தது. ஆயினும் அந்த ஊரடங்களை 2 மணிக்கெ அமுல்ப்படுத்துவதாக தற்பொது அறிவித்தும் உள்ளது.
இவ்வாறு அரசாங்கம் பொது மக்களின் நலன் கருதி ஊரடங்கு தளர்த்தும் நேரத்தை அதிகமாக்கியும் வங்கிகள் தாம் நினைத்தது போன்று 10 மணியுடன் தமது சேவைகளை இடைநிறுத்துகின்றன். ஆனால் ஐனாதிபதி அவர்கள் வங்கிகளை திறந்து மக்களுக்கு சேவையாற்றுமாறு தான் கூறியிருக்கின்றார்.
ஆனால் இங்குள்ள வங்கிகள் தாம் நினைத்தது போன்று 10 மணிக்கே வங்கிகளை மூடியுள்ளனர். இருந்தும் நாம் எங்கள்; நிலைமைகளை விளக்கி கூறியும் அவர்கள் அதனைக் கேட்கின்றதாக இல்லை.
இதனால் நாங்கள் நிர்க்கதியாக வீதிகளில் நிற்கின்றொம். எங்கள் பிள்ளைகள் பெற்றோர்கள் என எங்களை நம்பி வீடுகளில் இருக்கின்றவர்களுக்கு நாங்கள் என்னத்தைச் சொல்வது என்று தெரியவில்லை. நாங்களும் மனிதர்கள் தான். இனி தொடர்ந்து ஊரடங்கு போட்டால் எங்கள் குடும்பங்களது நிலை என்னவாகும்.
கொரோனோவால் அச்சப்பட்டிருந்தாலும் அதன் தாக்கம் ஆபத்து என்றாலும் அதனை சமாளிப்பதற்கு அல்லது தடுப்பதற்கு நாங்கள் உயிருடன் இருக்க வேண்டும். எத்தனை நாட்களுக்கு நாங்கள் உணவில்லாமல் வாழ முடியும். இனி எங்களுக்கு உணவுகளையோ அல்லது அத்தியாவசிய தேவைகளையோ யார் நிறைவேற்றுவார்கள். உணவில்லாமல் நாங்கள் இறந்து போவதா.
இவ்வாறு வங்கிகளின் முன்னால் நின்றிருந்தவர்கள் பலரும் வங்கிககளை திட்டித் திர்த்துக் கொண்டனர். அதிலும் சிலர் தாங்கள் வங்கிகளில் வைப்பு செய்த பணத்தை எடுப்பதற்காகவும் சிலர் நகைகளை அடகு வைப்பதற்காகவுமே வந்திருந்தனர். ஆனால் வங்கிகள் 10 மணிக்கு பூட்டியதாக அறிவித்ததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment