கொரோனோ தொற்று குறித்து சுவிஸ் போதகரின் பிலதெல்லியா மிஷனரி திருச்சபை விளக்கம் - Yarl Voice கொரோனோ தொற்று குறித்து சுவிஸ் போதகரின் பிலதெல்லியா மிஷனரி திருச்சபை விளக்கம் - Yarl Voice

கொரோனோ தொற்று குறித்து சுவிஸ் போதகரின் பிலதெல்லியா மிஷனரி திருச்சபை விளக்கம்

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டிருக்கும் கொரேனா தொற்றுத் தொடர்பாக எமது சபையினைத் தொடர்புபடுத்தி  வெளியாகியிருக்கும் செய்திகள்  குறித்து  கிறிஸ்துவின்  பணியில் எனக் குறிப்பிட்டு பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்  அளித்துள்ளதுள்ளது

குறித்த சபையின் தேவாலய முகப்புத்தகம் முடக்கப்பட்ட நிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட அச் சபையின் முகப்புத்தகத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.  இது தொடர்பாக அந்தச் சபையில் தலைமைக்காலய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது..

இயேசுக்கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்

கொரோனா தெற்றுத் தொடர்பானது

1. 1. எமது சபையின் தலைமைப் போதகர் அவர்கள் சுவிஸ்லாந்து நாட்டில் இருந்து இலங்கை நோக்கிப் பயணம் செய்யும் வரையில் கெரோனா நோயினால் பாதிக்கப்படவில்லை என்பதோடு குறித்த நோய்க்கான எந்த அறிகுறிகளையும் கொண்டிருக்கவில்லை.

2. 2. இலங்கையிலிருந்து மீண்டும் திரும்பிவரும் போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலும் குறித்த நோய்கான அறிகுறிகளில் ஒன்றான காய்ச்சல் அளவுப் பரிசோதனையின் பின்னரே அவர் தொடர்ந்து பிரயாணப்பட அனுமதிக்கப்பட்டுள்ளார்.

3. 3. யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியிலுள்ள பயத்தைப்  போக்கும் வகையிலும் தொற்றுநோயினைக் கட்டுப்படுத்தும் வகையிலும்  இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இலங்கையிலுள்ள எமது திருச்சபை சகல ரீதியிலும் ஒத்துழைப்பு வழங்கும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகின்றோம்.

மேலும் பொதுநலன் கருத்தி எமது சபையினால் நடாத்தப்பட்ட கூட்டங்களில் கலந்து கொண்ட மக்கள் தம்மை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்துமாறு பணிவுடன்  கேட்டுக்கொள்கின்றோம்.

எமது திருச்சபையின் முகப்புத்தகத்திலுள்ள படங்களை எடுத்து தவறான வகையில்  செய்திகளை வெளியிடுவோர் தயவு செய்து உண்மையினை அறிந்து செய்திகளை வெளியிடுங்கள்.

குறிப்பாக சுவிஸ் நாட்டில் வசிக்கும் எமது திருச்சபை வாலிபர்களின் புகைப்படங்களை எடுத்து யாழ்ப்பாணத்தில் இவர்கள் வசிக்கின்றார்கள் என்று தவறான செய்திகள் பரப்புகின்றனர். இவைகளை தயவு செய்து தவிர்த்துக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.





0/Post a Comment/Comments

Previous Post Next Post