இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் - மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை - Yarl Voice இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் - மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை - Yarl Voice

இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் - மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

இலங்கை முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை அமுல்ப்படுத்தப்பட்ட இவ் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை அமுலில் இருக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனோ தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இவ் ஊரடங்குச் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட இந்தக் காலப் பகுதியில் அத்தியாவசிய தேவைகள் மேற்கொள்வதற்கும் ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post