வடக்கு மக்களுக்கு அரசாங்கம் நிவாரணங்களை வழங்க வேண்டும் - விஐயகலா கோரிக்கை - Yarl Voice வடக்கு மக்களுக்கு அரசாங்கம் நிவாரணங்களை வழங்க வேண்டும் - விஐயகலா கோரிக்கை - Yarl Voice

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் நிவாரணங்களை வழங்க வேண்டும் - விஐயகலா கோரிக்கை


தற்போதைய அரசாங்கமானது நாட்டில் நிலவும்  அசாதாரண சூழ்நிலையில்  வடக்கு மக்கள் மீது அதிக கரிசனை செலுத்த வேண்டுமென முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்

 தற்பொழுது உலகம் பூராகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள வைரஸின் தாக்கமானது இலங்கையிலும் படிப்படியாக அதிகரித்தவண்ணம் உள்ளது.

வடக்கில் குறிப்பாக வடக்குமாகாணத்தில்  8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றார்கள் அவர்கள் அன்றாட உழைப்பினை மேற்கொண்டு வாழ்ந்துவரும் குடும்பங்களாக அதிக குடும்பங்கள் காணப்படுகின்றன.

எனவே இன்றைய தினத்திலிருந்து இரு நாட்கள் நாடுபூராகவும் ஊரடங்குச்சட்டம் அரசாங்கதாதினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு மக்கள் பெரிதும் பாதிக்கப்படவுள்ளார்கள்.

 வடபகுதி மக்கள் யுத்தத்திற்கு முகம் கொடுத்து பல இன்னல்களை அனுபவித்து வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களாக  காணப்படுகின்றார்கள்.

எனவே தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கமானது வடக்கு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க முன்வர வேண்டுமென விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post