இலண்டனில் இருந்து வந்தவருக்கு கொரோனோ தொற்று சந்தேகம் - யாழ் வைத்தியசாலையில் அனுமதி - Yarl Voice இலண்டனில் இருந்து வந்தவருக்கு கொரோனோ தொற்று சந்தேகம் - யாழ் வைத்தியசாலையில் அனுமதி - Yarl Voice

இலண்டனில் இருந்து வந்தவருக்கு கொரோனோ தொற்று சந்தேகம் - யாழ் வைத்தியசாலையில் அனுமதி

இலண்டனில் இருந்து வந்த வயோதிபப் பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதிதயை சேர்ந்த 73 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் அண்மையில் லண்டன் நாட்டிலிருந்து வருகை தந்துள்ளார். அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தனக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற அச்சத்தில் அவரது உறவினர்கள. ஊடாக  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுல்லார்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ள இலண்டனில் வந்தஒருவர் தொடர்பில் மருத்துவ சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.அவரது மருத்துவ அறிக்கை வந்த பின்னரே அவருக்கு வைரசஸ் தொற்று ஏற்பட்டு இருக்கின்றதா இல்லையா என்று உறுதியாக தெரிவிக்க முடியும் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post