தமிழரசின் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையொப்பம் - Yarl Voice தமிழரசின் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையொப்பம் - Yarl Voice

தமிழரசின் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையொப்பம்

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையோப்பமிட்டனர்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பணிமனையில் இன்று நண்பகல் 12 மணிக்கு வேட்புமனுவில் 4 வேட்பாளர்கள் கையொப்பமிட்டனர்.

தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ சேனாதிராசா எம்.ஏ.சுமந்திரன் சி.சிறிதரன் ஈ.சரவணபவன் த.சித்தார்த்தன் கஜதீபன் கு.சுரேன் திருமதி சசிகலா ரவிராஜ் இம்மானுவேல் ஆனல்ட் மற்றும் தபேந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஈ.சரவணபவன் பா.கஜதீபன் தபேந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டனர். ஏனைய ஆறு பேரும் நாளை கையொப்பமிடுகின்றனர்.

இதேவேளை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பு மனு நாளை முற்பகல் 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் பணிமனையில் கையளிக்கப்படவுள்ளது.
0/Post a Comment/Comments

Previous Post Next Post