தமிழ் மக்களை வேதனைப்படுத்தும் ஐனாதிபதியின் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை - குகதாஸ் - Yarl Voice தமிழ் மக்களை வேதனைப்படுத்தும் ஐனாதிபதியின் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை - குகதாஸ் - Yarl Voice

தமிழ் மக்களை வேதனைப்படுத்தும் ஐனாதிபதியின் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை - குகதாஸ்

ஐனாதிபதியின் கருத்துக்கள் தமிழ் மக்களை வேதனை ஏற்படுத்தியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் ஐனாதிபதியின் அத்தகைய கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும் அதனைக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

யுhழ் ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது நேற்று முன்தினம் ஐனாதிபதி தெரிவித்த கருத்துக்களுக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது..

துமிழ் மக்களின் வாக்குகள், காணாமற்போனோர், நீதி விசாரணை என்பன தொடர்பில் ஐனாதிபதி பல்வேறு கருத்துக்களை கூறியிருக்கின்றார். அவருடைய இந்தக் கருத்துக்கள் என்பது தமிழ் மக்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. அது மட்டுமல்லாமல் அந்தக் கருத்துக்களை ஒரு போதும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவும் முடியாது.

குறிப்பாக தமிழ் மக்களின் வாக்குகள் இனவாதம் என்று ஐனாதிபதி கூறியிருக்கின்றார். ஆனால் நாட்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு சிங்கள தலைவரை தெரிவு செய்வதற்குத் தான் வாக்களித்திருந்தனர். அவ்வாறு தான் ஒவ்வொரு ஐனாதிபதித் தேர்தல்களிலம் வாக்களித்துள்ளார்கள்.

இதனை ஐனாதிபதியும் அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு தமிழ் மக்கள் தமது வாக்குகளை அளிக்கின்ற போது எதனடிப்படையில் தமிழ் மக்களின் வாக்குகள் இனவாதம் என்று ஐனாதிபதி கூறுகின்றார் என்றும் கேள்வியெழுப்பினார். ஆகவே தமிழ் மக்களின் வாக்குகள் இனவாதம் அல்ல என்பதை ஐனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தெளிவாக எடுத்துக் கூறியிருக்கின்றதை பார்க்க வேண்டும்.

அதே போல காணாமற் போனோர் தொடர்பிலும் ஐனாதிபதி கூறியிரக்கின்ற கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவையாகவே இருக்கின்றது. தமது உறவுகள் தொடர்பில் மக்கள் போராடி வருகின்றனர். அதே போன்று அந்த மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்ற மக்கள் பிரதிநிதிகளும் கோரி வருகின்றனர். இவை இவ்வாறிருக்கையில் எல்லாவற்றையும் மறைக்கின்ற அல்லது மழுங்கடிக்கின்ற வகையில் ஐனாதிபதியின் கருத்துக்கள் அமைந்துள்ளன.

ஆகவே தமிழ் மக்கள் சார்ந்து ஜனாதிபதியால் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக வேதனைக்குள்ளாக்குகின்றது. மேலும் இத்தகைய கருத்துக்கள் நாட்டின் இன நல்லினக்கத்தை ஏற்படுத்துவதற்கு பெரியளவில் பாதிப்பாக இருக்கின்றது. 

எனவே தமிழ் மக்களின் நியாயாமான கோரிக்கைகளை புரிந்து கொண்டு ஐனாதிபதி செயற்பட வேண்டுமே தவிர தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களை கூறுவதோ அல்லது செயற்பாடுகளை முன்னெடுப்பதையோ தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் குகதாஸ் தெரிவித்துள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post