கோட்டாவிற்கு அரசியல் அறிவில்லாவிட்டால் அண்ணண் மகிந்தவிடம் கேட்டு தெரிய வேண்டும் - சுரேஸ் - Yarl Voice கோட்டாவிற்கு அரசியல் அறிவில்லாவிட்டால் அண்ணண் மகிந்தவிடம் கேட்டு தெரிய வேண்டும் - சுரேஸ் - Yarl Voice

கோட்டாவிற்கு அரசியல் அறிவில்லாவிட்டால் அண்ணண் மகிந்தவிடம் கேட்டு தெரிய வேண்டும் - சுரேஸ்

பொருளாதார நெருக்கடி தான் அரசியல் பிரச்சனைக்கு காரணம் என ஜனாதிபதி கோத்தபாய தெரிவித்திருப்பது அரசியல் அறிவின்மையே எடுத்துக் காட்டுகின்றது என தெரிவித்துள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் உப தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் அரசியல் அறிவு இல்லாத  கோத்தபாய தனது சகோதரனான மஹிந்தவிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதாரப் பிரச்சினையே அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கு காரணம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்தக் கருத்தானது அரசியல் அறிவின்மையே எடுத்துக்காட்டுகின்றது.கோட்டபாய அரசியல் தெரியாவிட்டால் தனது சகோதரனான பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழ் மக்களுக்கு இன்றுவரை நீதி அதிகாரங்களும் மறுக்கப்பட்டு வருகின்றன. தமிழ் மக்களுக்கு தேவையான தீர்வை வழங்குவதற்காக கடந்த ஆட்சியாளர்கள் எத்தனையோ முயற்சிகளை எடுத்துள்ளனர். குறிப்பாக சந்திரிக்கா காலத்திலும் சரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச காலத்திலும் சரி பல முயற்சிகள் எடுத்து அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வெளியில் வந்திருக்கின்றன.

இவற்றை உற்று நோக்கும் போது அரசியல் ரீதியாக பாரிய பிரச்சினை தமிழ் மக்களுக்கு உள்ளது என்பதையே வெளிக் காட்டுகின்றது.இந்த வரலாறு தெரியாத கோத்தபாய அபிவிருத்தி ஊடாக பிரச்சினையை தீர்ப்போம் என்று பிழையான விவாதங்களை முன்னெடுத்து வருகின்றார்.

தமிழ் மக்களுக்கு நீண்ட காலமாக உரிமைகள் மறுக்கப்பட்டு வந்ததன் விளைவாகவே உரிமைப் போராட்டம் இடம்பெற்றது அந்த உரிமை போராட்டத்தில் ஊடாக பாரிய யுத்தமொன்று உருவாகி ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டது எனினும் இன்று வரை தீர்வு காணப்படவில்லை.

ராணுவத்தில் இருந்த கோத்தபாயவுக்கு அனுபவங்கள் இல்லாமல் இருக்கலாம் எனவே இவை தொடர்பில் தனது சகோதரனான மஹிந்தவிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும.; ஏனெனில் மகிந்த ஜனாதிபதியாக இருந்தபோது கூட திஸ்ஸ விதாரண உடன் இணைந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஆலோசிக்கப்பட்டு அறிக்கைகளும் வெளிவந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் 18 தடவைகள் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது

மேலும் வடக்கு கிழக்கு மக்கள் தேர்தல்களில் இனவாதமாக வாக்களிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளா.ர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய தேர்தல் மேடைகளில் இனவாதியாகவே செயற்பட்டார். தனிச் சிங்கள வாக்குகளின் மூலம் என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கோசங்கள் எழுப்பினர்.

ஆவ்வாறு வெற்றி பெற்று அதன் பின்னரும் கூட தான் தனிச்சிங்கள வாக்கில் தான் வந்தேன் என்றும் கூறியிருக்கிறார். எனவே வடக்கு கிழக்கில் இனவாதமாக மக்கள் செயற்படவில்லை. மாறாக தென்னிலங்கையிலிருந்து இனவாதம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காணாமல் போனவர்கள் என்று யாரும் இல்லை அவர்கள் வெளிநாடுகளில் இருக்கலாம் என்று கூறியுள்ளார.; நாம் கேட்பது போரின் இறுதிப்போரில் சரணடைந்தவர்கள, கைது செய்யப்பட்டவர்கள், இராணுவத்திடம் கையளிக்கப்பட்டது என 20 ஆயிரம் பேர் வரை காணாமல் போயுள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்றே நாம் கேட்கின்ரோம்.

அவ்வாறு காணாமல் போனவர்கள் கனடாவிலும் ஜெர்மனியில் இல்லை. உயிருடன் அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்று போராடிக் கொண்டிருக்கும் உறவுகள் தேடி அலைகின்ரனர்.

நாட்டில் எவரும் காணாமல் போகவில்லை என்று கூறுவதாயின் மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் காணாமல் போனவர்களை கண்டறிவது தொடர்பில் ஆணைக்குழு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. அதில் ஏராளமான மக்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சாட்சியம் அளித்துள்ளனர் அவர்களுக்கு என்ன நடந்தது என்று கேட்டிருக்கின்ரனர்.

நாட்டில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்று கூறியுள்ளார் .ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய போட்டியிட்ட போது தாம் வெற்றி பெற்றால் அரசியல் கைதியை விடுதலை செய்வேன் என்று கூறியிருந்தார.; நாமல் ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என்று கூறியிருந்தார்.

அப்படியாயின் என்ன அடிப்படையில் இவ்வாறான கருத்துக்களை அவர் கூறுகின்றார் தமிழ் இளைஞர்கள் தமிழ் மாணவர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகின்றனர்

கடத்தல் கொலை வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள படை உயரதிகாரிகள் நீதிமன்றங்களுக்கு செல்லாது பொது வெளிகளில் சுதந்திரமாக செல்கின்றனர.; இவ்வாறான நிலைமைகளை தற்போதைய அரசில் ஆட்சியில் காணப்படுகின்றது. எனினும் தமிழ் அரசியல் கைதிகளாக பலர் இன்றும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

என்வே இவற்றை உணர்ந்து ஜனாதிபதி கருத்துக்களை வெளியிட வேண்டும். ஆகையினால் சிறுஐமத்தனமான கருத்துக்களை வெளியிடக் கூடாது. அத்தோடு வரலாற்றை தெரிந்து கொண்டு கருத்துக்களை வெளியிட வேண்டும் என்றார்.
--

0/Post a Comment/Comments

Previous Post Next Post